Home
Mobile

அக்டோபர் 30 சம்பவம் இருக்கு.. 7500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 30-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அக்டோபர் 30 சம்பவம் இருக்கு.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 specifications): 7500mAh பேட்டரி உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.8-இன்ச் 2கே ஒஎல்இடி பிளாட் டிஸ்பிளே (2K OLED flat display) டிஸ்பிளே வசதியடன் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ நியோ 11 போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

அக்டோபர் 30 சம்பவம் இருக்கு.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.

ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கடைக்கும். மேலும் இந்த போன் ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 specifications and price leaked ahead of October 30 launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X