Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. வருகிறது புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 11 ப்ரோ (iQOO Neo 11 Pro) என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீனா மற்றும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்யூ நியோ 11 ப்ரோ முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

ஐக்யூ நியோ 11 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 11 Pro Specifications): 6.82-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புது iQOO 5ஜி போன்..

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்செட் உடன் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிவி வரை மெமரி ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற பல சிறப்பான வசதிகள் உள்ளன.

7500mAh பேட்டரி உடன் ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஐக்யூ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

photos credits: iqoo

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 Pro specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X