Home
Mobile

முரட்டு பீஸ்-ஆ இருக்கே.. இப்படி ஒரு 5G போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 16ஜிபி ரேம்!

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலுக்கு போட்டியாக.. இல்லை இல்லை.. ஒன்பிளஸ் 15 மாடலை முடிச்சு விடும் அம்சங்களுடன் ரெடியாகும் ஐக்யூ 15 (iQOO 15) ஒருபக்கம் இருக்க.. ஐக்யூ நிறுவனமானது இன்னொரு முரட்டு பீஸையும் மார்க்கெட்டில் களமிறக்க உள்ளது. அது ஐக்யூ நியோ 11 ப்ரோ 5ஜி (iQOO Neo 11 Pro) ஸ்மார்ட்போனாகும்!

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை தொடர்ந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐயோ நியோ 11 ப்ரோ மாடல் ஆனது ஐக்யூ நியோ 11 சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த சீரிஸின் கீழ் ஐக்யூ நியோ 11 மற்றும் ஐக்யூ நியோ 11 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முரட்டு பீஸ்-ஆ இருக்கே.. இப்படி ஒரு 5G போனுக்கு தான் வெயிட்டிங்!

மற்ற எல்லா சீரீஸ்களிலும் இருப்பதை போலவே இதிலும் ப்ரோ வேரியண்ட் தான் வெயிட்டான அம்சங்களை பேக் செய்யும். சிப்செட்டை பொறுத்தவரை இது புதிய டைமன்சிட்டி 9500 கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள விவோ எக்ஸ்300 மற்றும் எக்ஸ்300 ப்ரோ மாடல்களிலும் கூட இதே சிப்செட் தான் இடம்பெறவுள்ளது.

மேலும் ஐயோ நியோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையில் இயங்கலாம் மற்றும் 16ஜிபி ரேம் உடன் அனுப்பப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7000+எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடனான 2கே ரெசல்யூஷன் உடனான பிளாட் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதில் ஆன்ட்டி-ரெஃப்ளெக்ஷன் கோட்டிங் உடனான என்பி பிளஸ் பேனல் (NB Plus Panel) என்றும் அழைக்கப்படும் 2கே சாம்சங் எவரெஸ்ட் அமோஎல்இடி (2K Samsung Everest AMOLED) டிஸ்பிளே இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் (குவால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆக இருக்கலாம்) மூலம் இயக்கப்படும் என்பதும், இது மார்க்கெட்டில் இருக்கும் மிகப்பெரிய 8கே வேப்பர் சேம்பர் சிஸ்டமை பெறும் என்பதும் கூட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதோடு 100W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7000+mAh பேட்டரி, 16ஜிபி வரையிலான ரேம், 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 50 மெகாபிக்சல் 1/1.5-இன்ச் பிரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 6.8-இன்ச் டிஸ்பிளே, அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் டூயல் ஸ்பீக்கர்ஸ் ஆகிய அம்சங்களை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.70,000 க்குள் (ரூ.69,990) இருக்கும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான "உயரமான" 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதில் OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 50-மெகாபிக்சல் 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள் இடம்பெறலாம்

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் ரியர் கேமரா யூனிட் ஆனது வட்ட வடிவில் இருந்து சதுரமாக மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் கொண்டு இயக்கப்படலாம். கடைசியாக இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். விலை ரூ.80,000 க்குள் (ரூ.79,999) இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 Pro 5G To Feature Dimensity 9500 16GB RAM Android 16 7000mAh Battery Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X