மொத்த மார்கெட் மிரள வருது.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 2K டிஸ்பிளே.. புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலான ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. 7500mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 2K டிஸ்பிளே மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கிடைக்க இருப்பது தெரிகிறது. இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் வெளியாகி கேமிங் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதனால், அடுத்த மாடலான ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. சீனாவில் இந்த மாதத்துக்குள் நியோ 11 போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப அதனுடைய பீச்சர்கள் மார்கெட்டில் கசியத் தொடங்கிவிட்டன.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) மூலமாக டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் மட்டுமல்லாமல் பட்ஜெட் விவரங்களும் கசிந்துள்ளன. இந்த பட்ஜெட்டை பார்த்தால் மிட்-ரேஞ்ச் விலையைவிட கொஞ்சம் மலிவான விலைக்கு இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது தெரிகிறது. இந்த விலைக்கு முன்பாக கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி பெரிய 7500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. அதேபோல, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் எதிர்பார்க்கலாம். 6.8 இன்ச் பிளாட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.
இந்த 2K டிஸ்பிளேவில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) சென்சார் கிடைக்க இருக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) கிடைக்க இருக்கிறது. அதோடு மான்ஸ்டர் சூப்பர் கோர் என்ஜின் (Monster Supercore Engine) கிடைக்க இருக்கிறது.
மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் தெரியவந்துள்ளது. சீனாவில் வெளியான பிறகு இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். விலையை பார்க்கையில், ரூ.31,071 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே, இது பட்ஜெட் பிரியர்களையும் தட்டித்தூக்கும்.
கிட்டத்தட்ட இதே பட்ஜட்டில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகியது. அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருந்தது. இப்போது, டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு போக மேலும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைத்தது.
ஆகவே, ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் பேட்டரி கேபாசிட்டி அப்கிரேட் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் குறைக்கப்பட்டு இருக்கிறது. நியோ 10 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்தது.
ஆகவே, நியோ 11 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். கேமராவில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இது கேமிங் மாடலாக இருக்கிறது. ஆகவே, நியோ 10 போனை போலவே 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா எதிர்பார்க்கலாம். சோனி சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








