Home
Mobile

இந்த போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தாண்டும் ஐக்யூ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தை ஒருகை பார்க்காமல் விடாது போல. பிளாக்ஷிப் பிரிவில் மட்டுமல்ல; பிக் பேட்டரி ஸ்மார்ட்போன் பிரிவிலும்! ஐக்யூ 13 மாடலை இறக்கிவிட்டு ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் வியாபாரத்தை சிரித்துவிட்ட ஐக்யூ நிறுவனம் இந்தாண்டும் "அதை" செய்யும் என்பதெல்லாம் நம்மில் பலரும் அறிந்ததே!

அதாவது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலுக்கு போட்டியாக ஐக்யூ 15 (iQOO 15) மாடலை கண்டிப்பாக இறக்கி விடும். ஐக்யூ 15 ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி!

இதுவொருபக்கம் இருக்க ஐக்யூ நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் உட்பட மற்ற நிறுவங்களின் "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக 2 புதிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யவுள்ளது. அது ஐக்யூ நியோ 11 சீரீஸ் (iQOO Neo 11 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) மற்றும் ஐக்யூ நியோ 11 ப்ரோ (iQOO Neo 11 Pro) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்

ஐக்யூ நியோ 11 சீரீஸ் என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்?
- 2கே ரெசல்யூஷன் உடனான OLED டிஸ்பிளே
- மெட்டல் மிடில் பிரேம்
- வெண்ணிலா வேரியண்ட்டில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ப்ரோ வேரியண்ட்டில் டைமன்சிட்டி 9500 சிப்செட்

- ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் பினிஷ்
- அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 7000mAh க்கும் அதிகமான திறன் கொண்டபேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒர்ஜின் ஓஎஸ் 6

ஐக்யூ நியோ 11 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இது ஐக்யூ 15 மாடலுக்கு பின்னர் அதாவது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம். பின்னர் இந்திய சந்தைக்கும் வரும். ஐக்யூ நியோ 11 ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ஐக்யூ நியோ 11 ப்ரோ ஆனது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

ஐக்யூ 15 சீரீஸில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? இந்த சீரீஸின் கீழ் ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 15 ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டை (Snapdragon 8 Elite 2) உடன் அறிமுகமாகும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இரண்டுமே 6.85-இன்ச் 2கே எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் மற்றும் 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமரா செட்டப்பில் நடுத்தர அளவிலான சென்சார் கொண்ட 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ யூனிட்டும் இடம்பெறலாம். மேலும் இந்த சீரீஸில் சுமார் 7,000mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன்களுமே ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் இது ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 iQOO Neo 11 Pro with 7000mAh Battery 100W Charging Launching After iQOO 15 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X