இதுதான் புதிய iQOO 5ஜி போன்.. OLED டிஸ்பிளே.. 7500mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
வரும் அக்டோபர் 20-ம் தேதி சீனாவில் ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஐக்யூ நிறுவனம். இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் உடன் ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் ஐக்யூ 15 மற்றும் ஐக்யூ நியோ 11 ஆகிய இரண்டு போன்களும் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்யூ நியோ 11 போனின் படங்களை வெளியிட்டுள்ளது ஐக்யூ நிறுவனம். குறிப்பாக டூயல் ரியர் கேமராக்கள், மென்மையான பூச்சு கொண்ட சாடின் ஏஜி கிளாஸ் (satin AG glass) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதுவும் 6.8-இன்ச் 2கே ஒஎல்இடி பிளாட் டிஸ்பிளே (2K OLED flat display) டிஸ்பிளே வசதியடன் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ நியோ 11 போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.
ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் 7500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த ஐக்யூ நியோ 11 போன் ரூ.35,000 விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








