Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. BYBASS சார்ஜிங்.. 6400mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. FPS மீட்டர்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களிடம் விட்ராதீங்க ப்ரோ என்று சொல்லும்படி 6400mAh பேட்டரி, பைபாஸ் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஈ-ஸ்போர்ட்ஸ் மோட், வேப்பர் கூலிங் சேம்பர், இன்-பில்ட் ஃஎப்பிஎஸ் மீட்டர் மட்டுமல்லாமல், ஃபாஸ்ட்டஸ்ட் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டுடன் ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போன் வெளியாக இருக்கிறது. இந்த ஐக்யூ போன் எப்போது வெளியாகிறது? அதிகாரப்பூர்வ பீச்சர்கள் என்ன? விலை எவ்வளவு இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களுக்குமான மாடலாக இந்த ஐக்யூ நியோ 10ஆர் வெளியாக இருக்கிறது. இதற்காகவே பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருப்பதும், அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அன்டுடு ஸ்கோர் (AnTuTu Score) மிரளும்படி இருக்கிறது.

விட்ராதீங்க ப்ரோ! BYBASS சார்ஜிங்.. 6400mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

பிரீமியம் கேமிங் மாடலாக இருந்தும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் என்னென்ன கேமிங் பீச்சர்கள் இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இறுதியாக எந்த விலைக்கு இதை மார்கெட்டில் எதிர்பார்க்கலாம் என்று விவரங்களையும் கொடுத்துள்ளோம்.

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): இந்த ஐக்யூ போனில் ஃபாஸ்ட்டஸ்ட் மற்றும் செக்மெண்ட் ஃபர்ஸ்ட் பவர்புல் சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) வருகிறது. இதுபோக இன்-பில்ட் ஃஎப்பிஎஸ் மீட்டர் (In-built FPS Meter), ஈ-ஸ்போர்ட்ஸ் மோட் (E-sports Mode) மற்றும் மான்ஸ்டர் மோட் (Monster Mode) கிடைக்கிறது.

இந்த சிப்செட்டின் அவுட்புட்டுக்கு ஏற்ப 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் 90 எப்பிஎஸ் (FPS) மற்றும் 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதேபோல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6400mAh பேட்டரியிலும் கேமிங்குக்கான பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, வேப்பர் கூலிங் சேம்பர் (Vapour Cooling Chamber) உள்ளது.

மேலும், பைபைஸ் சார்ஜிங் (Bybass Charging) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டெக்னாலஜி மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஒட்டுமொத்தமாக பேட்டரிக்கு செல்லாமல், குறிப்பிட்ட அளவில் நேரடியாக மதர்-போர்டுக்கும் செல்லும் இதன் மூலம் பேட்டரி ஹீட், ஓவர் சார்ஜிங் போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படும். இப்படி கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களை கொடுக்கிறது.

இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் ராகிங் ப்ளூ (Raging Blue) மற்றும் மூன்நைட் டைட்டானியம் (Moonknight Titanium) ஆகிய 2 கலர்கள் வெளியாக இருக்கின்றன. மேற்கண்ட பீச்சர்களை ஐக்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மற்றும் விலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்டெட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட வேரியண்ட்கள் வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. ரூ.26,999 பட்ஜெட்டில் விற்பனைக்க வர இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 10R With Snapdragon 8s Gen 3 To Launch March 11 Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X