ஆர்டர் பிச்சிக்கும்.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 6400mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போனின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது முதல் கலர், டிசைன் மற்றும் கேமரா விவரங்கள் வரையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால், ஐக்யூ பிரியர்கள் குஷியாகிவிட்டனர். இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? இதன் விலை எப்படி? இந்தியாவில் எப்போது வெளியாகும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நிறுவனமே நேரடியாக அதனுடைய எக்ஸ் (X) தளத்தில், இந்த ஐக்யூ நியோ 10ஆர் விரைவில் வெளியாக இருப்பதையும், அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவதையும் உறுதி செய்துள்ளது. அதோடு ராகிங் ப்ளூ (Raging Blue) கலர் வேரியண்ட்டின் டிசைனுடன் போட்டோவை வெளியிட்டிருக்கிறது. ஆனால், எப்போது வெளியாகும் என்ற தேதியை குறிப்பிடவில்லை.

ஆனால், வரும் வாரத்தில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ராகிங் ப்ளூ கலர் மட்டுமல்லாமல், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் மற்றும் டூயன்-டோன் பாடி ஆகிய பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது. மற்ற பீச்சர்கள் எப்படி?
ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே ஐக்யூ நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இருப்பினும், மார்கெட்டில் பெரும்பாலான பீச்சர்கள் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை இப்போது பார்க்கலாம். டூயல்-டோன் கலரில் வந்தாலே அந்த போன் கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருக்கிறது. ஆகவே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே வருகிறது.
6.78 இன்ச் அமோலெட் (AMOLED) பேனல் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. பிளாட் டிசைனில் வர இருக்கிறது. 50 எம்பி ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) வர இருக்கிறது.
மேலும், ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் வருகிறது. 256 மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) பேக் செய்துள்ளது.
இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 6400mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே கிடைப்பதால், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இதுபோக இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) சப்போர்ட் உள்ளது. இந்த போனில் IP64 ரெசிஸ்ன்ட் கிடைக்கிறது. வை-பை 6, 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
விலை எப்படி இருக்கும்? இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் ஆரம்ப விலை ரூ.26,999 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிட மலிவான விலைக்கும் வர வாய்ப்புள்ளது. பிரீமியம் டிசைனில் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாடலை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications