மிட்-ரேஞ்ச் மிரளுது.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 12GB ரேம்.. 6400mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் கஸ்டமர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போனின் விலை மற்றும் அன்டுடு ஸ்கோர் (AnTuTu Score) விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பு மேலும் எகிறி இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் பீச்சர்கள், விலை மற்றும் அன்டுடு ஸ்கோர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால், அந்த போனின் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. டிசைன், கேமரா, சிப்செட், அன்டுடு ஸ்கோர் மற்றும் விற்பனை விவரங்களை ஐக்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இவற்றை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ நிறுவனம் உறுதி செய்த பீச்சர்களை பார்க்கையில், இந்த போனில் ராகிங் ப்ளூ (Raging Blue) மற்றும் மூன்நைட் டைட்டானியம் (Moonknight Titanium) கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்3 எஸ்ஓசி (Snapdragon 8s Gen 3 SoC) கிடைக்கிறது. கேமிங் மோட் (Gamimg Mode) உள்ளது.
இதற்கு ஏற்ப 90 எப்பிஎஸ் மற்றும் 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 4என்எம் பிராசஸ் மற்றும் 1.7 மில்லியன் அன்டுடு ஸ்கோரை உறுதி செய்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஐக்யூ நியோ 10ஆர் ரூ.30000 பட்ஜெட் செக்மெண்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஆரம்ப வேரியண்ட் ரூ.26,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அதேபோல மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டுக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருக்கிறது.
அதேபோல ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. பிளாட் டிசைனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டிசி டிம்மிங் சப்போர்ட் வர இருக்கிறது. 6400mAh பேட்டரி சிஸ்டம் உள்ளது.
இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சாம்சங் சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








