மார்ச் 19 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 6400mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்..எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6400mAh பேட்டரி கொண்ட பேட்டரி சிஸ்டம் மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் மெயின் கேமரா, 1.5K ரெசொலூஷன் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை தேதியை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): ஐக்யூ நியோ மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் டூயல்-டோன் டிசைன் இதிலும் கிடைக்கிறது. ஆகவே, ராகிங் ப்ளூ (Raging Blue) கலர் வேரியண்ட்டில் ப்ளூ மற்றும் ஒயிட் பேனல் கிடைக்கிறது. இதுபோக மூன்நைட் டைட்டானியம் (MoonKnight Titanium) கலரும் வருகிறது.

பட்ஜெட்டில் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. 3 ஓஎஸ் அப்டேட் வருகிறது.
இப்போது, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்கிறது. 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதில் 4500 பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம்.
இந்த டிஸ்பிளேவுக்கு கொரில்லா புரொடெக்சன் கிடையாது. இருப்பினும், ஸ்காட் எக்ஸ்என்சேஷன் யுபிஐ (Schott Xensation Up) கிளாஸ் புரொடெக்சன் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System), ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) வருகிறது.
இதுபோக 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கொண்ட 6400mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஃபாஸ்டஸ்ட் மற்றும் ஹீட் கன்ட்ரோல்டு பேக்கப் கொடுக்கும்படி இந்த பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் உள்ளது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பட்ஜெட்டில் வெளியாகியும் இந்திய கேமரா பிரியர்களுக்கான பீச்சர்களை கொடுக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராக்களில் கேலக்ஸி கோர் சென்சார்கள் இருக்கின்றன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.28,999ஆகவும் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. இருப்பினும், ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ரூ.24,999 ஆரம்ப விலையில் கிடைக்க இருக்கிறது. மார்ச் 19ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








