தீபாவளி ஆஃபர்ல இதை வாங்கனும்.. 6400mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போனுக்கு கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. 6400mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, IP65 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2,500 கூப்பன் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,498 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், ரூ.734 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல ரூ.25,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஸ்காட் சென்சேஷன் அப் கிளாஸ் (Schott Xensation Up Glass) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90FPS கேமிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
இதுபோக 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களுக்கும் பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் கொடுக்கும். 1.5K ரெசொலூஷன் மற்றும் 4500 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கிறது. 8 ஜிபி + 256 ஜிபி மட்டுமல்லாமல், 2 கூடுதல் மாடல்கள் உள்ளன.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்களும் கிடைக்கின்றன. இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. பக்கா அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கார்டு வருகிறது.

3 ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். மேலும், ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) உள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி08ஏ3 (GC08A3) சென்சார் கிடைக்கிறது. அதேபோல கேலக்ஸிகோர் ஜிசி32ஈ1 (GC32E1) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த 2 கேமராக்களிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கும் இதில் அவுட்புட் பக்காவாக இருக்கிறது.
இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6400mAh பேட்டரி கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (In-display Fingerprint Sensor) இன்பிராரெட் சென்சாரும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








