Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் டீசர் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த புதிய ஐக்யூ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் இந்த அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 6.78-இன்ச் 1.5K அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்

மேலும் 6400mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. லூனார் டைட்டானியம் (Lunar Titanium) மற்றும் ப்ளூ ஒயிட் ஸ்லைஸ் (Blue White Slice) நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். பின்பு இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: Amazon, iqoo

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10R Teaser Released in India: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X