வருது புதுசு.. பழசுக்கு ஆஃபர்.. 6400mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஐக்யூ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) இன்று வெளியாக இருக்கிறது. இதனால், முன்னதாக வெளியான ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போனானது, இப்போது ஆஃபர் விலைக்கு வந்துள்ளது. சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 6400mAh பேட்டரி, 80W சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக்கில் கிடைக்கும் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): இந்த ஐக்யூ போனில் கேமிங் பிரியர்களுக்கான பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. கூடவே, அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) வருகிறது.

அதேபோல டிஸ்பிளேவிலும் பட்டையை கிளப்பும்படி 90FPS கேமிங் அவுட்புட், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், பிளாட் டிசைனில் ஷாட் சென்சேஷன் அப் கிளாஸ் (Schott Xensation Up Glass) புரொடெக்சன் கிடைக்கிறது.
மேலும், 1.5K ரெசொலூஷன், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 4500 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி அல்லது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் ஆப்ஷனில் கிடைக்கின்றன.
சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸிகோர் ஜிடி08ஏ3 சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. கேலக்ஸிகோர் சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. அதிக பேக்கப் கொண்ட 6400mAh பேட்டரி உள்ளது.

இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.1,500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆகவே, ரூ.25,498 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.24,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த ஐக்யூ போனை ராகிங் ப்ளூ (Raging Blue) அல்லது மூன்லைட் டைட்டானியம் (MoonKnight Titanium) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய முடியும். இந்த நேரத்தில் ஐக்யூ நியோ 10 போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்4 சிப்செட் மற்றும் கியூ1 கேமிங் சிப் கிடைக்க இருக்கிறது. 144FPS கேமிங் அவுட்புட் மற்றும் 120W சார்ஜிங் அவுட்புட் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. ஆகவே, முந்தை மாடலில் இருந்து எல்லாமே அப்கிரேட் செய்யப்பட்டு வெளியாக இருப்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications








