Home
Mobile

அடுத்த மாதம் உறுதி.. 6400mAh பேட்டரி.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): 6.78-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அடுத்த மாதம் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன்.. எந்த மாடல்?

அதேபோல் ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி மெமரி + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6400mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. லூனார் டைட்டானியம் (Lunar Titanium) மற்றும் ப்ளூ ஒயிட் ஸ்லைஸ் (Blue White Slice) நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன்.. எந்த மாடல்?

குறிப்பாக 5ஜி, வைஃபை, ஜிபியுஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

அதேபோல் ஐக்யூ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

photo credit: 91mobiles, iqoo

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10R India launch timeline leaked online: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X