Home
Mobile

எழுதி வச்சிக்கோங்க.. 12GB ரேம், 6400mAh பேட்டரி.. பிப். 2025-ல் இந்த புதிய iQOO போனின் சேல் பிச்சிக்கும்!

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல எண்ணிக்கையிலான (சரியாக சொல்ல வேண்டுமென்றால் 12) புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் முதலில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவது ஐக்யூ நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் மாடலான - நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போனாகும்.

ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பிப்ரவரி 2025 இல் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரியான தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கான பிரத்யேக கலர் ஆப்ஷனை பெறும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

பிப். 2025-ல் இந்த புதிய iQOO போனின் சேல் பிச்சிக்கும்!

91மொபைல்ஸ் வழியாக கிடைத்த தகவலின்படி ஐக்யூ அதன் க்னேச்சர் டூயல்-டோன் டிசைனை ஐக்யூ நியோ 10ஆர் மாடலுக்கு கொண்டு வந்துள்ளது. இது பிரத்தியேகமான ப்ளூ அண்ட் ஒயிட் கலரில் அறிமுகமாகும். ஐக்யூ நிறுவனம் இந்த கலர் ஆப்ஷனை - ரேஜிங் ப்ளூ என்று அலைக்கும்.

அதாவது இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது ஸ்க்குரிக்கல் கேமரா மாட்யூல் (Squircle camera module) உடன் வரும். இந்த போனின் பேக்பின் பேனலின் பெரும்பகுதி நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான டூயல்-டோனில் இருக்கும். இந்த கலர் ஆப்ஷன் இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது மற்ற சந்தைகளில் இது கிடைக்காது.

ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 8 (Qualcomm Snapdragon 8s Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி சோனி LYT-600 ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்

ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உட்பட மேலும் பல மெமரி ஆப்ஷன்களில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாப்டவேர்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் (Funtouch OS) கொண்டு இயங்கலாம்.

கடைசியாக தொழில்துறையிலேயே மிகப்பெரிய 6,400mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது. ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை இது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.22,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

2025 பிப்ரவரியில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன? விவோ வி50 சீரீஸ் (Vivo V50 Series). இந்த சீரீஸின் கீழ் விவோ வி50 மற்றும் விவோ வி50 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸின் விலை ரூ.40,000 - ரூ.50,000 செக்மென்ட்டில் இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56). இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.32,990 மற்றும் ரூ.43,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2). சீனாவில் ஒப்போ பைண்ட் என்5 ஆக அறிமுகம் மாடல் உலகின் மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆக அறிமுகம் செய்யப்படும். இதன் விலை ரூ.1,39,990 என்று நிர்ணயம் செய்யப்படலாம்.

டெக்னோ கர்வ் (TECNO Curve). இந்தியாவில் இது ரூ.10,000 - ரூ.20,000 செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தலாம். ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 சீரீஸ் (ASUS ROG Phone 9 Series). இந்த சீரிஸின் கீழ் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ப்ரோ (Asus ROG Phone 9 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். விலையை பொறுத்தவரை முறையே ரூ.83,990 மற்றும் ரூ1,01,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

கடைசியாக பிப்ரவரி 2025 இல் ஷாவ்மீ 15 சீரீஸ் (Xiaomi 15 Series) ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சீரீஸின் கீழ் ஷாவ்மீ 15 (Xiaomi 15), ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro) மற்றும் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அல்ட்ரா மாடலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10R Exclusive Colour in India Launch on Feb 2024 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X