Home
Mobile

ஏப்.30 குறிச்சாச்சு.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. iQOO நியோ 10-க்கு வருது புது கலர்!

இந்திய மார்கெட்டில் மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போனில் 2 புதிய கலர் வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. இதில் முதலாவது கலரை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துவிட்டது. அதேபோல வெளியீட்டு தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டு மே 26ஆம் தேதியில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இன்பெர்னோ ரெட் (Inferno Red) மற்றும் டைட்டானியம் குரோம் (Titanium Chrome) ஆகிய கலர்களில் மட்டுமே கிடைத்தது. இப்போது, புதிதாக 2 கலர்களில் கிடைக்க இருப்பதை ஐக்யூ நிறுவனம், அதனுடைய எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.

ஏப்.30 குறிச்சாச்சு.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதில் பிளாக் மற்றும் ஒயிட் ஷேட்களில் பாதி டிசைனை தெரிவிக்கும்படி போஸ்டரும் வெளியானது. இப்போது, முதலாவது கலர் வேரியண்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஆல்பைன் ஒயிட் (Alpine White) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலருடன் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த தேதிக்குள் பிளாக் கலர் வேரியண்ட்டின் பெயரும் உறுதி செய்யப்பட இருக்கிறது.

அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. புதிய கலர் வேரியண்ட்டின் விலையில் மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்னதாக வெளியான இன்பெர்னோ ரெட் மற்றும் டைட்டானியம் குரோம் கலர் வேரியண்ட்களின் (8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி) ஆரம்ப விலை ரூ. 31,999ஆக இருக்கிறது. இதே விலைக்கு வெளியாக வாய்ப்புள்ளது.

ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது.

லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஃபான்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுத்துள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் கொண்டிருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதிலும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது.

ஹைலைட் பீச்சராக 7000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 8.09 எம்எம் தடிமன் மற்றும் 206 கிராம் எடை கொடுத்துள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இதே பீச்சர்களுடன் புதிய கலர் வேரியண்ட்களும் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 10 With Alpine White Colour Officially Revealed Coming on April 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X