விட்ராதீங்க ப்ரோ.. ரூ.2,250 டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. SONY OIS கேமரா.. எந்த மாடல்?
பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு தவிர்க்க முடியாத ஆப்ஷனாக ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இப்போது, தள்ளுபடி விலையில் கிடைப்பதால், விற்பனையிலும் மிரளவிட்டு வருகிறது. இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்,
அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.43,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மேலும், நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது.

ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட மாடலாக இருக்கிறது. இதற்கு மூன்று மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த போனில் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை, ஐக்யூ நியோ 10 மாடலில் பெரிய 7000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனுடன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தகவல்படி, இந்த சார்ஜிங் வசதி மூலம் சுமார் 19 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
மேலும், முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 36 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதனுடன் பைபாஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. கேமிங் போன்ற அதிக பர்ஃபாமென்ஸ் தேவைப்படும் பயன்பாடுகளின்போது வெப்பத்தை கட்டுப்படுத்த 7K ஐஸ் டோம் விஸி லிக்விட் கூலிங் சிஸ்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED திரை வழங்கப்பட்டுள்ளது. இது 2800 x 1260 பிக்சல்கள் ரெசல்யூஷன், 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட்டும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த டிஸ்பிளே 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10+ ஆதரவை வழங்குகிறது. இதனுடன் 4320Hz PWM டிம்மிங், DC டிம்மிங் மற்றும் MEMC போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் வீடியோ பார்ப்பது, கேமிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு தேவையான பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை இந்த போன் வழங்குகிறது.
பர்ஃபாமென்ஸை பொறுத்தவரை, ஐக்யூ நியோ 10 மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 4nm சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளுக்காக அட்ரினோ 825 GPU இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அதிக பர்ஃபாமென்ஸ் தேவைப்படும் கேம்கள் மற்றும் மல்டிடாஸ்கிங் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் சோனி IMX882 சென்சார் கொண்ட 50MP மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது f/1.79 அபெர்ச்சர் மற்றும் OIS ஆதரவை கொண்டுள்ளது. இதனுடன் 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவும் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ ரெக்கார்டிங் வசதியிலும் இந்த போன் கவனம் செலுத்துகிறது. முன்பக்க கேமரா மூலம் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். மேலும், பின்பக்க கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
கனெக்டிவிட்டிகளை வசதிகளை பொறுத்தவரை, ஐக்யூ நியோ 10 மாடலில் 5G SA/NSA மற்றும் டூயல் 4G VoLTE ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. USB Type-C ஆடியோ வசதியும் உள்ளது. மேலும், IP65 ரேட்டிங் மூலம் டஸ்ட் மற்றும் வாட்டர் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த போன் 8.09mm தடிமனும், 206 கிராம் எடையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications
