மே.26 குறிச்சாச்சு.. மிட்-ரேஞ்ல 7000mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 7K கூலிங் சிஸ்டம்.. எந்த மாடல்?
இவரு வேற மாதிரிங்க ப்ரோ என்று ஐகியூ பிரியர்கள் காலரை தூக்கிவிட்டு சொல்லும்படியான பீச்சர்களுடன் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) போனானது இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதியாகி இருப்பதால், ஐக்யூ பிரியர்கள் குஷியாகிவிட்டனர். அல்ட்ரா பிரீமியம் கேமிங் பிரியர்கள்கூட இந்த ஐக்யூ நியோ 10 போனின் பீச்சர்களை பார்த்து மிரளுகின்றனர். இதன் வெளியீடு எப்போது? என்னென்ன பீச்சர்கள் இருக்கின்றன? விற்பனை எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் கேமிங் மாடல்களாக ஐக்யூ நியோ 10 சீரிஸ் (iQOO Neo 10 Series) களமிறங்க இருக்கின்றன. இதில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஐக்யூ நியோ 10 போன் வெளியாக இருக்கிறது. இந்த போனின் சிப்செட், பேட்டரி மற்றும் டிசைன் விவரங்கள் ஏற்கனவே வெளியாகிருந்தது. இப்போது, மே 26ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ இந்திய நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. ஆனால், மற்ற மாடல்கள் குறித்த விவரங்களை கொடுக்கவில்லை. இருப்பினும், அல்ட்ரா பிரீமியம் கேமிங் பீச்சர்களை கொண்டிருக்கும் இந்த ஐக்யூ நியோ 10 மாடலே ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications): முந்தைய நியோ மாடல்களை போலவே டூயல் டோன் டிசைனில் இன்பெர்னோ ரெட் (Inferno Red) கலரும், டைட்டானியம் குரோம் (Titanium Chrome) கலரும் கிடைக்க இருக்கிறது. அதேபோல பிளாட் டிஸ்பிளே மற்றும் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், கியூ1 (Q1) சூப்பர்கம்பியூட்டிங் சிப் கிடைக்கிறது.
இந்த பிரத்யேக கேமிங் சிப்செட் மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. 144FPS கேமிங் அவுட்புட் மற்றும் 7K வேப்பர் கூலிங் சேம்பர் (Vapor Cooling Chamber) கிடைக்கிறது. ஆகவே, ஹெவி கேமிங்கின் போதும்கூட ஸ்டெபிள் மற்றும் ஹீட் கன்ட்ரோல்டு அவுட்புட் கிடைக்கும்.

இதுபோக சார்ஜிங்கின் போது கேமிங் விளையாடும் பிரியர்களுக்காக பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, மதர் போர்டுக்கு நேரடியாக எலக்ட்ரிசிட்டி செல்வதால், பேட்டரி லைப் மற்றும் ஹீட் கன்ட்ரோல் கிடைக்கும். இந்த செக்மெண்ட்டில் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அந்த பேட்டரியுடன் 8.09 எம்எம் தடிமன் கொண்ட மாடலாக இது இருக்கிறது.
இவ்வளவு பெரிய பேட்டரியை நிமிடங்களில் சார்ஜ் செய்துகொள்ளும்படி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களை மட்டுமே ஐக்யூ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல ரூ.35,000 பட்ஜெட் பிரிவில் இந்த ஐக்யூ நியோ 10 வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 26ஆம் தேதிக்கு தெரிந்துவிடும்.
இப்போது, எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ஐக்யூ போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. டூயல் கேமரா வருவதால், அதில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. சோனி சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15, ஃபன்டச்ஓஎஸ் வருகிறது.


Click it and Unblock the Notifications