பின்றானே இவன்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் கேமிங் பிரியர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும்படியான பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) போனானது வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 மட்டுமல்லாமல், சூப்பர்கம்ப்யூட்டிங் கியூ1 என்று டூயல் சிப் செட் மாடலாக வெளியாகி இருக்கும் இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android OS 15) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது.

இதற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அட்டேட் கொடுக்கப்படுகிறது. கேமிங் பீச்சர்களை பொறுத்தவரை, சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் மட்டுமல்லாமல் 144FPS கேமிங் அவுட்புட், கேம் சூப்பர் ரெசொலூஷன் (Game Super Resoultion) மற்றும் 7000எம்எம் வேப்பர் கூலிங் சேம்பர் கிடைக்கிறது. இதுபோக 3000Hz கேமிங் டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மேலும், நைட் விஷன் மோட் மற்றும் பைபாஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கொண்ட டூயல் ரியர் கேமரா உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய வழக்கமான செட்டப் வருகிறது. சோனி சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.
ஏஐ பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. ஆகவே, ஏஐ நோட் அசிஸ்ட், லைவ் டெக்ஸ்ட், லைவ் கட்-அவுட், ஏஐ எரைஸ், ஏஐ போட்டோ என்ஹான்ஸ், ஏஐ மேஜிக் மூவ் போன்ற பீச்சர்கள் இருக்கின்றன. இதுபோக ஏஐ டாகுமெண்ட், ஏஐ ஸ்க்ரீன் டிரான்ஸ்லேஷன், ஏஐ டிரான்ஸ்கிரிப்ட், ஏஐ கால் டிரான்ஸ்லேஷன், ஏஐ சூப்பர் லிங்க் மற்றும் ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர் பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த ஐக்யூ போனில் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதற்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். 10 மணி நேர ஹெவி கேமிங் பேக்கப், 23 மணி நேர ஓடிடி பிளேபேக் பெற்று கொள்ளலாம். ஹேண்டில் செய்ய ஏதுவாக வெறும் 8.09 எம்எம் தடிமன் மட்டுமே கிடைக்கிறது.
இன்ஃபெர்னோ ரெட் (Inferno Red) மற்றும் டைட்டானியம் குரோம் (Titanium Crome) கலர்களில் கிடைக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10 போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், என்எப்சி (NFC), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) மற்றும் வை-பை 7 (Wi-Fi 7) கிடைக்கிறது. 16 5ஜி பேண்ட்கள் கிடைப்பதால், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆகவும் உள்ளது. ஜூன் 3ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யலாம். இன்று ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.2000 டிஸ்கவுண்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








