Home
Mobile

மொத்த இந்தியாவும் வாங்குது.. மிட்-ரேஞ்ச் ரேட்ல 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களும் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படி இந்த ஐக்யூவில் 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி மட்டுமல்லாமல், அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக ஐக்யூ நியோ 10 இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுத்தும் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு வெளியானது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக மட்டுமே இருக்கிறது.

மொத்த இந்தியாவும் வாங்குது.. மிட்-ரேஞ்ச் ரேட்ல 7000mAh பேட்டரி மாடல்!

அமேசான் தளத்தில் இப்போது, ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1,250 வரையில் தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ரூ.30,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதேபோல 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்களுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

7000mAh பேட்டரி இருந்தும், 8.09 எம்எம் தடிமன் மற்றும் 206 கிராம் எடை வருகிறது. அல்ட்ரா பிரீமியம் கேமிங் லுக்கில் இன்ஃபெர்னோ ரெட் (Inferno Red) மற்றும் டைட்டானியம் குரோம் (Titanium Crome) ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிளாட் டிஸ்பிளே டிசைனை கொடுக்கிறது. முழு பீச்சர்கள் மிரளவிடும்படி இருக்கிறது.

ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications): 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 4320 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

மொத்த இந்தியாவும் வாங்குது.. மிட்-ரேஞ்ச் ரேட்ல 7000mAh பேட்டரி மாடல்!

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்கள் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். இதுபோன்ற பிரீமியம் டிஸ்பிளேவுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 8s Gen 4) சிப்செட் மற்றும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android OS 15) மற்றும் கேமிங் பீச்சர்கள் என்ஹான்ஸ் செய்யப்பட்ட ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது.

இந்த சிப்செட் மூலம் 144FPS கேமிங் அவுட்புட் பெறலாம். அதேபோல கியூ1 கம்ப்யூட்டிங் என்னும் கேமிங் சிப்செட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே மற்றும் பர்ஃபாமென்ஸ் ஆகியவற்றுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக கேமரா பீச்சர்கள் இருக்கின்றன.

சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker), எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor) போன்ற பீச்சர்களையும் இந்த ஐக்யூ நியோ 10 கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10 With 50MP Camera Available At Discounted in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X