மே 26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 7000mAh பேட்டரி.. வருகிறது புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் ஆனது வரும் மே 26-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போனின் முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 specifications): அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapadragon 8s Gen 4) சிப்செட் உடன் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 7000மிமீ² அல்ட்ரா-லார்ஜ் VC கூலிங் சிஸ்டம் (7000mm² ultra-large VC cooling system) ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
7000mAh பேட்டரி வசதியுடன் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
இன்ஃபெர்னோ ரெட் (Inferno Red) மற்றும் டைட்டானியம் குரோம் (Titanium Chrome) நிறங்களில் இந்த புதிய ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.35,000-க்கு கீழ் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








