Home
Mobile

iQOO அசத்துறீயே.. 8.09 மிமீ டிசைனில் 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே, SONY கேமரா.. என்ன மாடல்? என்ன விலை?

ஐக்யூ (iQOO) நிறுவனம் வருகிற மே 26 ஆம் தேதி அன்று, இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 ஸ்மார்ட்போனை (India's First Snapdragon 8s Gen 4 smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. அது ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மாடல் ஆகும். அறிமுகத்திற்கு பின்னர் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கவுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த மைக்ரோசைட் - இந்த ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ், பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் திறன்கள் வெளிப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் டிஸ்பிளே (Camera and Display) குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுளது. ஐக்யூ பிராண்டின் படி, ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் ஆனது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (32MP selfie camera) கொண்டிருக்கும். அதன் ரியர் கேமரா செட்டப்பில் OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்கும்.

iQOO அசத்துறீயே.. 8.09 மிமீ டிசைனில் 7000mAh பேட்டரி!

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் ஆனது AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும், இது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை (Refresh Rate) வழங்கும். மேலும் இந்த டிஸ்பிளே 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸையும் (Peak Brightness) உறுதி செய்கிறது. இருப்பினும், இந்த பிராண்ட் டிஸ்பிளே அளவை உறுதிப்படுத்தவில்லை.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப், இன்-ஹவுஸ் சூப்பர் கம்ப்யூட்டிங் Q1 சிப், LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் இணைக்கப்படும். இது 8.09 மிமீ தடிமன் கொண்ட இந்தியாவின் மிக மெல்லிய 7,000mAh பேட்டரி ஸ்மார்ட்போனாக (India's slimmest 7,000mAh battery smartphone) இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விலை (iQOO Neo 10 Priece Range in India): ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் சுமார் ரூ.35,000 ஆக இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 கலர்களில் வரும்: Inferno Red மற்றும் Titanium Chrome. ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட உலகளவில் மே 27 அன்று டைமன்சிட்டி 9400இ சிப்புடன் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 7 உடன் போட்டியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ரூ.22000 பட்ஜெட்டில் 7200mAh பேட்டரி உடன் அறிமுகமான ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (iQOO Z10 5G Specifications):
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே

- அட்ரெனோ 720 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32MP செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி

- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65
- 5ஜி (SA / NSA)
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ
- எடையில் 199 கிராம்

முன்னதாக ரூ.13000 பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி உடன் அறிமுகமான ஐக்யூ இஸட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (iQOO Z10x 5G Specifications):
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2408 × 1080 பிக்சல்ஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட்
- 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம், 128ஜிபி / 256ஜிபிசி UFS 3.1 ஸ்டோரேஜ்

- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார், - எல்இடி ஃபிளாஷ், 4கே வீடியோ பதிவு ஆதரவு
- எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி

- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- ஐபி64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன்
- 5ஜி (NSA) மற்றும் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- அளவீட்டில் 165.7×76.3×8.09மிமீ
- எடையில் 204 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10 Slimmest 7000mAh battery First Snapdragon 8s Gen 4 Phone All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X