யாரு சாமி அவன்.. ரூ.26,000 பட்ஜெட்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. 2 சிப்செட்.. டூயல்-டோன் பாடி.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஐக்யூ நியோ 10 ப்ரோ (iQOO Neo 10 Pro) போனின் வெளியீட்டு தேதியானது, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட சிப்செட்டுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. டூயல்-டோன் பாடி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, டைமன்சிட்டி 9400 சிப்செட் மட்டுமல்லாமல் பிரத்யேக கியூ2 கேமிங் சிப்செட் போன்ற பீச்சர்களில் தட்டித்தூக்கி இருக்கும் இந்த ஐக்யூ நியோ 10 ப்ரோ போனின் உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் வரும் நவம்பர் 29ஆம் தேதி இந்த போன் வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் முதலில் வெளியாகிறது. ரூ.26,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருப்பதாக சீன மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது, டிசைன், கலர் விவரங்களுடன் சிப்செட் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 (Octa Core MediaTek Dimensity 9400) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கு பிரத்யேமாக கியூ2 (Q2) சிப்செட் பேக் செய்துள்ளது. மெட்டாலிக் பினிஷிங் கொண்ட டூயல்-டோன் பாடி மற்றும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி வருகிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக பிளாட் டிஸ்பிளே பேக் செய்துள்ளது. இந்த ஐக்யூ நியோ 10 ப்ரோ போனில் ஷேடோ பிளாக் (Shadow Black), ரேலி ஆரஞ்ச் (Rally Orange) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்கள் இருக்கின்றன.
இது கிட்டத்தட்ட ஐக்யூ நியோ9 ப்ரோ போனின் டிசைனில் லுக் கொடுக்கிறது. மேற்கண்ட் பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், மற்ற பீச்சர்கள் சீன மார்கெட் வட்டாரங்களில் கசிந்துள்ளன. ஆகவே, இந்த கசிந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். வரும் நாட்களில் இதே பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஐக்யூ நியோ 10 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 10 Pro Specifications): இந்த ஐக்யூவில் 1.5K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான ஐக்யூ நியோ 9 ப்ரோ போனிலேயே 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வந்ததால், இந்த அப்கிரேட் வெர்ஷனில் கண்டிப்பாக 120W எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த போனில் கேமிங் பிரியர்களுக்கு கூடுதலாக பேக்கப் கொடுக்க 6100mAh பேட்டரி வர இருக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், 7.99 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்க இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் விசிஎஸ் பயோனிக் என்ஜின் சப்போர்ட் இந்த மாடலிலும் கிடைக்கலாம். ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) சென்சார் வருவது உறுதியாகும். 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் வரும் என்பதில் சந்தேமில்லை. நவம்பர் 29ஆம் தேதி தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications








