முரட்டு காம்பினேஷனா இருக்கே.. 7000mAh பேட்டரி, 16GB ரேம், 1TB மெமரி, Snapdragon 8 Elite சிப், 120W சார்ஜிங்!
என்னங்க சார் இது முரட்டு காம்பினேஷனா (Combination) இருக்கே என்று கூறவைக்கும்படியான அம்சங்களுடன், ஐக்யூ நிறுவனம் அதன் அடுத்த பிக் பேட்டரி (Big Battery) ஸ்மாட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? முறையே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மற்றும் டைமன்சிட்டி 9400 சிப்செட்களால் இயக்கப்படும் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மற்றும் ஐக்யூ நியோ 10 ப்ரோ (iQOO Neo 10 Pro) மாடல்களின் வரிசையில் இன்னொரு நியோ 10 சீரீஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் (iQOO Neo 10 Pro Plus) மாடலாகும்.

தற்போது வரை ஐக்யூ நியோ 10 சீரிஸின் கீழ், ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) மாடல் மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே சீரிஸின் கீழ் (கடந்த டிசம்பரில்) சீனாவில் அறிமுகமான ஐக்யூ நியோ 10 5ஜி (iQOO Neo 10 5G) ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது இந்தியாவின் பிஐஎஸ் (BIS) மற்றும் இஎம்இஐ (IMEI) சான்றிதழ் தரவுத்தளங்களில் காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தான் ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் சீன அறிமுகம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஐக்யூ நிறுவனம் தொடர்ந்து பல புதிய மாடல்களை.. ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) மற்றும் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஆகிய மாடல்களை.. இந்திய சந்தைக்கு கொண்டு வருவதால்.. எதற்கும் ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் மாடல் மீது ஒரு கண் வைப்பது நல்லது.
ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும் (iQOO Neo 10 Pro Plus Expected Specifications and Price)?
- 2கே ரெசல்யூஷன் உடனான 6.82-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே
- அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 5
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிஓ வரை LPDDR5x ரேம்
- 1டிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ்
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- 7000mAh பேட்டரி
- விலையை பொறுத்தவரை சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.35,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
விரைவில் இந்தியாவிற்கு வரும் ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் (iQOO Neo 10 5G Expected Specifications and Price): இது கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் வந்தது.
மேலும் ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படலாம். இது தவிர்த்து ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை. விலையை பொறுத்தவரை இது ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








