அடுத்த iQOO போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?
ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் (iQOO Neo 10 Pro Plus) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஐக்யூ நிறுவனம். அதாவது இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் அறிமுகமாகும். தற்போது சீனாவில் 3C சான்றிதழைப் பெற்றுள்ளது ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ். அதேபோல் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (iQOO Neo 10 Pro Plus Specifications): 6.82-இன்ச் 2கே பிளாட் ஒஎல்இடி (2K flat OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் இந்த ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி மெமரி + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில். பின்பு யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
7000mAh பேட்டரி வசதி ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சில நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








