Home
Mobile

ரூ.3000 ஆபரில் அடிச்சு தூக்க போகுது.. மே 5 முதல் SALE.. 120W சார்ஜிங், 7000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா, IP65!

ஐக்யூ (iQOO) நிறுவனமானது, கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த அதன் பிரபலமான மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்து, அந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அது ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போனாகும்.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபெர்னோ ரெட் மற்றும் டைட்டானியம் குரோம் ஆகிய கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைத்தது. தற்போது இது ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் (Alpine White and Asphalt Black) ஆகிய 2 புதிய கலர் ஆப்ஷன்களை பெற்றுள்ளது.

ரூ.3000 ஆபரில் அடிச்சு தூக்க போகுது.. மே 5 முதல் SALE!

ஆல்பைன் ஒயிட் மாடல் ஆனது ஒரு நேர்த்தியான எதிர்கால தோற்றத்தை (futuristic look) கொண்டு உள்ளதுடன், துல்லியமான லேசர் பொறிப்புடன் உருவாக்கப்பட்ட ஸ்டார் டிரெயில் டெக்ஸ்சரையும் கொண்டுள்ளது. இது நல்ல வெளிச்சத்தில் பார்க்கும்போது, ​​பகட்டாக இல்லாமல் ஒரு தனித்துவமான டெப்த்தை வழங்கும் சிக்கலான "நட்சத்திரத் தடங்களை" நீங்கள் காணலாம்.

இது தொடுவதற்கு மென்மையாகவும், கறை படியாத பினிஷ் உடனும் இருப்பதால், பனி போன்ற தோற்றத்தை அப்படியே தக்க வைத்து கொள்கிறது. மறுகையில் உள்ள ஆஸ்பால்ட் பிளாக் மாடல் ஆனது ரேஸிங் பாதையின் வேகம் மற்றும் உறுதியிலிருந்து உத்வேகம் பெற்று, அடர்த்தியான, மேட் பினிஷ் உடன் வருகிறது.

விலை மற்றும் விற்பனை: ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் கலர் ஆப்ஷன்களின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.37,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் மே 5 ஆம் தேதி முதல் அமேசான்.இன் (Amazon.in), ஐக்யூ.காம் (iQOO.com) மற்றும் விவோ எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டுகளுடன் ரூ.3000 உடனடித் தள்ளுபடி கிடைக்கும் மற்றும் 6 மாதங்கள் வரை வட்டியில்லா இஎம்ஐ ஆப்ஷனின் கீழும் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.78-இன்ச் (2800×1260 பிக்சல்ஸ்) 1.5கே AMOLED டிஸ்பிளே
- 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- 144Hz ரெப்ரெஷ் ரேட்
- 360Hz டச் சாம்பிளிங் ரேட்
- 5500 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- HDR10+ ஆதரவு
- 4320Hz PWM டிம்மிங்
- DC டிம்மிங் மற்றும் MEMC ஆதரவு

- அட்ரினோ 825 GPU உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 8GB / 12GB LPDDR5x அல்ட்ரா ரேம்
- 256GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம் (நானோ + நானோ)
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 6

- 1/1.95″ சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்ச்சர், OIS, LED ஃபிளாஷ் கொண்ட 50MP ப்ரைமரி கேமரா
- GC08A3-WA1XA சென்சார் கொண்ட 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் (எப்/2.2 அபெர்ச்சர், 4K 60 fps வரை வீடியோ பதிவு)
- 32MP செல்பீ கேமரா (எப்/2.45 அபெர்ச்சர், 4K 60 fps வரை வீடியோ பதிவு)

- ஸ்க்ரீனில் பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ரா ரெட் சென்சார்
- USB டைப்-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- அளவீட்டில் 163.72×75.88×8.09மிமீ
- எடையில் 206 கிராம்
- தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 7000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
iQOO Neo 10 New Alpine White Asphalt Black Launched Sale From May 5 Rs 3000 Bank Discount Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X