Home
Mobile

அடங்காத iQOO.. மிட்ரேன்ஜ் விலையில் அடுத்த 5G போன்.. 12GB ரேம், ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4, ஆண்ட்ராய்டு 15!

இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி மற்றும் ஐக்யூஸ் இஸட்10எக்ஸ் 5ஜி ஆகிய 2 பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களையும், சீனைவில் ஐக்யூ இஸட்10 டர்போ மற்றும் ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஆகிய 2 பவர்-பேக்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்த கையோடு.. ஐக்யூ நிறுவனம் உளகளவில் அதன் அடுத்தாஹ் ஸ்மாட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.

அது ஐக்யூ நியோ 10 5ஜி (iQOO Neo 10 5G) ஸ்மார்ட்போனாகும். இது இந்தியாவின் பிஐஎஸ் (BIS) மற்றும் இஎம்இஐ (IMEI) சான்றிதழ் தரவுத்தளங்களில் காணப்பட்டுள்ளதால், இது கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

அடங்காத iQOO.. மிட்ரேன்ஜ் விலையில் அடுத்த 5G போன்!

ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்: இது கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் வந்தது.

மேலும் ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படலாம். இது தவிர்த்து ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை. விலையை பொறுத்தவரை இது ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி ஐக்யூ நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டது, எனவே ஐக்யூ நியோ 19 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது

நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7) ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கடைசி நான்-ப்ரோ நியோ ஸ்மார்ட்போன் ஆகும்; இது இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது. ஐக்யூ நிறுவனத்தின் கீழ் கடந்த ஆண்டு அறிமுகமான ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை; அதற்கு பதிலாக ரூ.35,999 க்கு ஐக்யூ நியோ 9 ப்ரோ மட்டுமே அறிமுகமானது. ஆக ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகமானது இந்திய சந்தையில் சில சலசலப்புகளை ஏற்படுத்தலாம்!

ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை: ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: கடந்த ஆண்டு அறிமுகமான ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் பஞ்ச்-ஹோல் டிசைனில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ரியர் கேமராவில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) கொண்டு இயங்குகிறது. இது பெரிய 6500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்டு இயக்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு 2 ஆண்டுகள் மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழையும் பெற்றுள்ளது.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான ஐக்யூ இந்தியா இஸ்டோர் (iQOO India eStore) வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10 5G India Launch soon Check out Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X