Home
Mobile

மே 26 இருக்கு கச்சேரி.. இப்படி ஒரு பட்ஜெட்டில் 120W சார்ஜிங், 7000mAh பேட்டரி, 144fps கேமிங்-ஆ.. iQOO அசத்தல்!

ஐக்யூ இஸட் 10 5ஜி மற்றும் ஐக்யூ இஸட் 10எக்ஸ் 5ஜி ஆகிய 2 பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களை (Big Battery Smartphones) அறிமுகம் செய்து இந்திய சந்தையில் சலசலப்பை கையோடு ஐக்யூ நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் வருகிற மே 26 தேதியன்று ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) மாடலுக்கு பிறகு ஐக்யூ நியோ 10 சீரிஸின் கீழ் இந்திய சந்தையில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டவுடன்.. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் டிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்களை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு பட்ஜெட்டில் 120W சார்ஜிங், 7000mAh பேட்டரி-ஆ!

கூடவே இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பேட்டரி குறித்த விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் ​​இந்தியாவில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்த ஸ்மார்ட்போனின் AnTuTu ஸ்கோர் என்ன? என்கிற விவரங்களும் வெளியாகியுள்ளன.

ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் டிசைன் மற்றும் அம்சங்கள் (iQOO Neo 10 Design and Confirmed Specifications): இந்த பிரிவில் (அதாவது இந்த விலை பிரிவில்) ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆக என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் AnTuTu ஸ்லோர் சுமார் 2.42 மில்லியன் பாயிண்ட்ஸ் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மற்றும் ஒரு இன்-ஹவுஸ் க்யூ1 சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் மூலம் போன் இயக்கப்படும் என்பதை டீஸர் இமேஜ் உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபெர்னோ ரெட் மற்றும் டைட்டானியம் என்கிற 2 கலர்களில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய பெரிய 7,000mAh பேட்டரியை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பைபாஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பெரிய பேட்டரி இருக்கும் போதிலும், இந்த ஸ்மார்ட்போன் 8.9 மிமீ தடிமன் என்கிற ஸ்லிம் டிசைனை கொண்டுள்ளது. இதை அமேசான் லிஸ்டிங் உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 7000 மிமீ2 வேப்பர் கூலிங் சேம்பர், பைபாஸ் சார்ஜிங் மற்றும் 144fps கேமிங்கும் இருக்கும்

இந்தியாவில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (ப்ரைஸ் ரேன்ஜ்) எப்படி இருக்கும் (iQOO Neo 10 Price Range in India)? இந்த ஸ்மார்ட்போனின் விலை வரம்பு ரூ.35,000 க்கும் குறைவாக இருக்கும் என்றும் டீஸ் செய்யப்பட்டு உள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நியோ 9 9 ப்ரோ ரூ.35,999 க்கு அறிமுகமானது.

முன்னதாக அறிமுகமான ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை (iQOO Z10x 5G Price and Specifications): ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: கடந்த ஆண்டு அறிமுகமான ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் பஞ்ச்-ஹோல் டிசைனில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ரியர் கேமராவில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) கொண்டு இயங்குகிறது. இது பெரிய 6500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்டு இயக்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு 2 ஆண்டுகள் மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழையும் பெற்றுள்ளது.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான ஐக்யூ இந்தியா இஸ்டோர் (iQOO India eStore) வழியாக வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (iQOO Z10 5G Major Specifications): இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ், 5000 நிட்ஸ் ஆதரவு உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 12ஜிபி வரை ரேம் உடனான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

மேலும் இது 50எம்பி மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், 32எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 மூலம் இயங்குகிறது. இதற்கு மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். கடைசியாக இது 90W வேகமான சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய, 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் (iQOO Z10x 5G Price in India): இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது . பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.21,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.23,999 என்றும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.25,999 க்கும் அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ இந்தியா இஸ்டோர் வழியாக விற்பனைக்கு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 10 120W Charging 7000mAh Battery Price Range Revealed India Launch on May 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X