Home
Mobile

அடிச்சான் பாரு iQOO.. 7000mAh பேட்டரி உடன் புதிய மினி ஸ்மார்ட்போன்.. OnePlus-க்கு ரிவீட்டு.. எந்த மாடல்?

உண்மையில் இனிமேல் தான் பல "தரமான.. சிறப்பான.." ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கு பிள்ளையார் சுழி போடப்போவது சாம்சங்கும், ஆப்பிளும் தான். செப்டம்பர் 4 இல் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ, செப்டம்பர் 9 இல் ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் என தொடங்கி அடுத்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலாக.. பல பிளாக்ஷிப் போன்கள் அறிமுகமாக உள்ளன.

இந்த பட்டியலில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் அதற்கு நேரடி போட்டியான ஐக்யூ 15 (iQOO 15) மாடல் மட்டுமல்ல.. ஒன்பிளஸ்-ன் அடுத்த மினி / காம்பாக்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 5T) மாடலுக்கு "நேரடி போட்டியாக" ஐக்யூ 15 மினி (iQOO 15 Mini) என்கிற ஸ்மார்ட்போனும் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடிச்சான் பாரு iQOO.. 7000mAh பேட்டரி உடன் புதிய மினி ஸ்மார்ட்போன்!

இதுகுறித்த ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது ஐக்யூ 15 சீரிஸின் கீழ் அதிக திறன் கொண்ட பேட்டரி கொண்ட ஒரு மினி ஸ்மாட்போனும் அறிமுகமாகும் என்கிறது, அது ஐக்யூ 15 மினி (iQOO 15 Mini) அல்லது ஐக்யூ 15டி (iQOO 15T) என்று அழைக்கப்படலாம். அதாவது ஒன்பிளஸ் 15டி அல்லது ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடலுக்கு "வில்லன்" ஆக அறிமுகம் செய்யப்படலாம்

ஐக்யூ 15 மினி அல்லது ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீன சமூக ஊடகத்தளமான வெய்போவில், டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு பகிர்ந்துள்ள தகவல்களின்படி - ஐக்யூ 15 மினி ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படலாம். இது ஒரு சிலிக்கான்-கார்பன் பேட்டரி ஆக இருக்கும். இதுதவிர்த்து ஐக்யூ 15 மினி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஐக்யூ 15 சீரீஸின் கீழ் ஐக்யூ 15 மினி அல்லது ஐக்யூ 15டி மாடல் உடன் சேர்த்து ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒன்பிளஸ் 15 மாடலின் நேரடி போட்டியாளர் ஆன ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் மீதுதான் அனைவரின் கண்களும் உள்ளன. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டை (Snapdragon 8 Elite 2) உடன் அறிமுகமாகும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 15, ஐக்யூ 15 அல்ட்ரா ஆகிய இரண்டுமே 6.85-இன்ச் 2கே எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் மற்றும் 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா செட்டப்பில் நடுத்தர அளவிலான சென்சார் கொண்ட 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ யூனிட்டும் இடம்பெறலாம். மேலும் இந்த சீரீஸில், ஐக்யூ 15 மினி மாடலில் உள்ளதை போலவே 7,000mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் இது ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

ஒன்பிளஸ் 15டி அல்லது ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீன டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.3-இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது (வரவிருக்கும்) ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் (Snapdragon 8 Elite 2 SoC) கொண்டுஇயங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Mini Smartphone with 7000mAh Battery iQOO 15 Mini or iQOO 15T to Compete OnePlus 15T
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X