Home
Mobile

ஏப்.11 வரை எந்த 5G போனும் வாங்கிடாதீங்க.. பட்ஜெட் விலையில் iQOO-வின் புது போன் வருது.. எந்த மாடல்?

வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதியன்று ஐக்யூ (iQOO) ஒரு எதிர்பாராத டிவிஸ்டை நமக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது போல் தெரிகிறது. ஐக்யூ நிறுவனம் சில தினங்களுக்கு முன்பாகவே, 2025 ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று ஐக்யூ இஸட்10 (iQOO Z10) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

ஆனால் ஐக்யூ நிறுவனம் அதே நாளில் இன்னொரு ஸ்மார்ட்போனாயும் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO Z10x) மாடலாக இருக்கலாம். ஐக்யூ இஸட்10எக்ஸ் என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன விலைக்கு வரலாம்? இதனுடன் வரும் ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

ஏப்.11 பட்ஜெட் விலையில் iQOO-வின் புது போன் வருது.. எந்த மாடல்?

ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்:
- 8ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 15
- மாலி ஜி615 எம்சி2 ஜிபியு உடனான டைமன்சிட்டி 7300 சிப்செட்
- விலை ரூ.15,000 - ரூ.20,000 க்குள் இருக்கலாம்

ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்: முந்தைய டீஸர்களின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 7,300mAh பேட்டரி பேக் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது, ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) உடன் வரும் என்பது உறுதிசெய்யபட்டுள்ளது.

மேலும் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகம் ஆகும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. நல்ல சிப்செட், மிகப்பெரிய பேட்டரி, ஈர்க்கக்கூடிய சார்ஜிங் ஸ்பீட் மற்றும் குவாட் கர்வ்டு AMOLED டிஸ்பிளே ஆகியவற்றைப் பெறுவதால் - ரூ.22,000 க்குள் என்கிற விலை நிர்ணயம் நிச்சயம் ஒரு சிறந்த டீல் ஆக அமையும்

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஹை-எண்ட் ஆப்ஷன்களும் (சற்று அதிக விலைக்கு) அறிமுகமாகும். இது ஸ்டெல்லர் பிளாக் மற்றும் கிளேசியர் சில்வர் என இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படுவம்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ இஸட்10 5ஜி மற்றும் ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் இஸட்10 சீரீஸில் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) அல்லது ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவைகள் ஏப்ரல் 11 ல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.40,000 க்குள் (ரூ.39,990) இருக்கலாம்.

ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- LTPS பேக்லைட்டிங் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- பிளாஸ்டிக் மிட்-ஃபிரேம் டிசைன்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்
- அட்ரினோ 825 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh பேட்டரி
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.45,000 க்குள் (ரூ.44,990) இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO May Launch iQOO Z10x 5G along with iQOO Z10 in India on April 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X