Home
Mobile

ப்பா என்னவொரு காம்பினேஷன்.. 7000mAh பேட்டரி, 12GB ரேம், 90W சார்ஜிங்.. புது iQOO போன்.. என்ன மாடல்?

ஏற்கனவே ஐக்யூ நிறுவனம், வருகிற 2025 ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று இந்தியாவில் அதன் ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் வெளியாகி உள்ள ஒரு புதிய தகவல், ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து விரைவில் இன்னொரு மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறுகிறது.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான பராஸ் குக்லானி (PassionateGeekz) வழியாக கிடைத்த தகவலின்படி, ஐக்யூ நிறுவனம் கூடியவிரைவில் அதன் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) வெர்ஷனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும். இது 8GB அல்லது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7000mAh பேட்டரி, 12GB ரேம், 90W சார்ஜிங்.. புது iQOO போன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கோல்ட் மற்றும் சில்வர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமான இது 7000mAh என்கிற பெரிய அளவிலான பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக ஏப்ரல் 11 இல் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான பின்னர், ஐக்யூ இஸட்10 டர்போ சீனாவில் அறிமுகமாகி. பின்னர் மற்ற சந்தைகளுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

Take a Poll

ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனால் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 7300mAh பேட்டரியுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான எந்தவொரு ஸ்மார்ட்போனும் இவ்வளவு மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்ததில்லை என்று ஐக்யூ நிறுவனம் கூறுகிறது.

மேலும் ஒரு அதிகாரப்பூர்வ டீஸர் வழியாக ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பை ஐக்யூ நிறுவனம் காட்சிப்படுத்தியது. அதில் டூயல் சென்சார்கள் மற்றும் OIS ஆதரவுடன் வட்ட வடிவ கேமரா செட்டப்பை காண முடிகிறது; அது வெள்ளை நிற பினிஷை பெற்றுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், 1.5கே ரெசல்யூஷன் உடனான OLED டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான OriginOS 5 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் ஒருபக்கம் இருக்க, ஐக்யூ நிறுவனம் புதிய டேப்லெட் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது ஐக்யூ பேட் 3 ப்ரோ மாடல் ஆக இருக்கலாம். இது 12.95-இன்ச் எல்சிடி பேனலுடன் வரும் என்றும், டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

நினைவூட்டும் வண்ணம் டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் என்பது கடந்த அக்டோபர் 2024 இல் அறிவிக்கப்பட்ட டைமன்சிட்டி 9400 சிப்செட்டின் ஓவர்லாக்டு வெர்ஷன் ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஏப்ரல் 11 அன்று நடைபெறவிருக்கும் மீடியாடெக்கின் டைமன்சிட்டி டெவலப்பர் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான ஐக்யூ பேட் 2 ப்ரோ (iQOO Pad 2 Pro) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருந்தன. ஆனால் சிப்செட் வேறுபட்டன. ஐக்யூ மாடலில் டைமன்சிட்டி 9300 பிளஸ் இருந்தது; விவோ மாடலில் டைமன்சிட்டி 9400 சிப்செட் இருந்தது. ஆக இம்முறையும் விவோ பேட் 4 ப்ரோ மாடலின் பெரும்பாலான அம்சங்கள் ஐக்யூ பேட் 3 ப்ரோ மாடலில் இடம்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO may launch iQOO Z10 Turbo Soon After iQOO Z10 5G Launch in India on April 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X