அடுத்த இரண்டு மாதங்களில் அதிரடி இருக்கு: முதன்மை ரக அம்சங்களோடு ஐக்யூ ஸ்மார்ட்போன்கள்!
கடந்தாண்டு 5ஜி அம்சத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நிறுவனம் விரைவில் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிப்ஸ்டர் டெபியன் ராயின் சமீபத்திய கசிவுப்படி மார்ச் மாத இறுதிக்குள் இந்தியாவில் முதன்மை ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஐக்யூ7 மாடலாக இருக்கும் எனவும் அடுத்ததாக இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
ஐக்யூ 7 மாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.43,100 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.47,600 ஆக இருந்தது. இது ப்ளூ, பிளாக் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 12 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட் உள்ளிட்டவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. 4000 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரட்டை கேமராக்கள் உள்ளன. அதேபோல் முன்புறத்தில் 16 எம்பி ஸ்னூப்பர் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4ஜி வோல்ட், இரட்டை சிம் ஆதரவு, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை இருக்கிறது.


Click it and Unblock the Notifications