சிம்பிள் அட்வைஸ்! இதை மட்டும் பண்ணா ப்ரீமியம் போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்..

|

ஒவ்வொரு நாளும் புதுப்புது ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து அறிமுகமான வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான புதிய ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்கி இருந்தாலும் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு புதுப்புது அம்சங்களைக் கொண்டிருக்கிறது. எனவே ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போதே மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவது சிறந்த முடிவாகும்.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட்

iQoo 9T ஸ்மார்ட்போனானது அமேசானில் ரூ.49,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்ட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியை பெறலாம். 1 லட்ச ரூபாய் வரையிலான ஸ்மார்ட்போன்களில் கூட இதே ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் தான் பொருத்தப்பட்டிருக்கிறது. அதே சிப்செட் தான் இந்த ஸ்மார்ட்போனிலும் உள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தள்ளுபடி விலையில் ஐக்யூ 9டி

தள்ளுபடி விலையில் ஐக்யூ 9டி

iQoo 9T ஸ்மார்ட்போனானது ரூ.50,000க்கு கீழ் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது அண்டுடுவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கிறது.

iQOO 9T ஆனது ரூ.49,999 என ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.4000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,500 வரை தள்ளுபடி

ரூ.13,500 வரை தள்ளுபடி

iQoo 9T ஸ்மார்ட்போனானது அமேசானில் ரூ.49,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. எச்டிஎஃப்சி அல்லது எஸ்பிஐ வங்கி கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியை பெறலாம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.45,999 என வாங்கலாம். கூடுதலாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.13,500 வரை தள்ளுபடியை பெறலாம். அதன்படி இந்த மொத்த சலுகையையும் பயன்படுத்தி இந்த ப்ரீமியம் ஐக்யூ போன் மாடலை ரூ.35,000க்கு கீழ் வாங்கலாம்.

விவோ வி1+ இமேஜிங் சிப்

விவோ வி1+ இமேஜிங் சிப்

ஐக்யூ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேகமாக விவோ வி1+ இமேஜிங் சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி ISOCELL GN5 மெயின் கேமரா மற்றும் 4700 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் iQoo 9T 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான Funtouch OS 12 மூலம் இயங்குகிறது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100% P3 கலர் கேமட் கவரேஜ், மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பன்சேஷன் (MEMC) மற்றும் HDR10+ உடனான 6.78-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ E5 AMOLED (1,080 x 2,400 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

12GB ரேம் ஆதரவு

12GB ரேம் ஆதரவு

முன்னரே குறிப்பிட்டபடி, இது Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடனாக 12GB வரையிலான LPDDR5 ரேம் மூலம் இயக்கப்படுகிறது. iQoo 9T 5G ஆனது Vivo நிறுவனத்தின் இன்-ஹவுஸ் V1+ இமேஜிங் சிப்பையும் கொண்டுள்ளது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, iQoo 9T 5G ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ISOCELL GN5 மெயின் கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு என இதன் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த போன் 256ஜிபி வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, 5ஜி, வைஃபை, ப்ளூடூத் v5.2, ஓடிஜி, NFC, ஜிபிஎஸ், FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்றவைகளை வழங்குகிறது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்-ஐ கொண்டுள்ள iQoo 9T 5G ஆனது 120W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடனான 4,700mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் எட்டு நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை நிரப்பும்.

Best Mobiles in India

English summary
iQoo 9T Smartphone Available at Huge Discount Price in Amazon: Right Time to Buy Premium Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X