ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ விவரக்குறிப்புகள் இதுதானா?- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 50 எம்பி கேமரா!
மாடல் எண்கள் வி2171ஏ மற்றும் வி2172ஏ கொண்ட ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் 3சி மற்றும் டீனா போன்ற சீன சான்றிதழ் அமைப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் எனவும் இவை முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 9 தொடரில் எந்தெந்த அம்சங்கள் எதிர்பார்க்கப்படலாம் என்ற தகவலை பார்க்கலாம். ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகளை டீனா தளம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்யூ 9 தொடர் சாதனம்
வெய்போ லீக் படி வெளியான தகவல்களை முழுமையாக பார்க்கலாம். டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் மூலம் வெளியான தகவலின்படி, ஐக்யூ 9 தொடர் சாதனம் ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்த தொடரில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதனங்களின் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இதை இன்சைடர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ விவரக்குறிப்புகள்
ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆனது முழு எச்டி ப்ளஸ் சாம்சங் இ5 அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் 2கே சாம்சங் இ5 சாம்சங் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது ஓவர் க்ளாக்கிங் பதிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
இரண்டு போன்களிலும் விசி முப்பரிமாண வெப்பக் கட்டுப்பாடு அமைப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு போன்களும் 4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் திறன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 9 சாதனம் ஆனது 6.78 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இது தட்டையான வடிவமைப்புடன் பஞ்ச் ஹோல் கட்டமைப்பு வசதியை கொண்டிருக்கிறது.

iQoo 9, iQoo 9 Pro கேமரா அம்சங்கள்
வெய்போவில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ இரண்டு சாதனங்கும் மூன்று பின்புற கேமரா அமைப்புகளுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 12 எம்பி மூன்றாம் நிலை கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. உயர்நிலை வேரியண்ட் ஆனது இரண்டு 50 எம்பி சென்சார்கள் மற்றும் 16 எம்பி மூன்றாம் நிலை கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது.

50 எம்பி பிரதான கேமரா
வெய்போவின் ஐக்யூ பதிவின்படி, ஸ்மார்ட்போன்கள் 50 எம்பி சாம்சங் ஜிஎன்எஸ் சென்சார் கொண்டதாக இருக்கும் எனவும் இது கிம்பல் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 7ஜி லென்ஸை இந்த சாதனம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ஐக்யூ 9 ப்ரோ சாதனமானது 150 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் சென்சாருடன் வரும் எனவும் இது அல்ட்ரா வைட் வைட் ஆங்கிள் வசதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களில் நான்கு படங்கள் வெளிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 சென்சார் வசதியோடு வரும் எனவும் இது சீனாவ் ஜனவரி 5 ஆம் தேதி இனறு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications