Home
Mobile

வேற லெவல் அனுபவம்- 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 2கே டிஸ்ப்ளே உடன் ஐக்யூ 8 சீரிஸ்: எல்லாமே உச்சம்!

ஐக்யூ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐக்யூ 8 ப்ரோ சாதனம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் உடன் 2கே டிஸ்ப்ளே ஆதரவை கொண்டுள்ளது. ஐக்யூ 8 சீரிஸ் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ஐக்யூ 8 மற்றும் ஐக்யூ 8 ப்ரோ மாடல்கள்

ஐக்யூ 8 மற்றும் ஐக்யூ 8 ப்ரோ மாடல்கள்

ஐக்யூ 8 மற்றும் ஐக்யூ 8 ப்ரோ மாடல்கள் அடங்கிய ஐக்யூ 8 சீரிஸ் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களானது இந்தாண்டு ஜனவரி முதல் ஐக்யூ 7 தொடரின் வாரிசுகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித காட்சிகளுடன் வருகிறது. இதில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ப்ரோ மாடல் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகின்றன.

ஐக்யூ 8 சாதனத்தின் விலை

ஐக்யூ 8 சாதனத்தின் விலை

ஐக்யூ 8 சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இந்திய மதிப்பு விலை ரூ.43,600 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.48,200 ஆக இருக்கிறது. இது லெஜண்ட்ரி எடிஷன் உட்பட பிஎம்டபிள்யு எம் மோட்டார் ஸ்போர்ட் வண்ண விருப்பம் மற்றும் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது.

ஐக்யூ 8 ப்ரோ கிடைக்கும் தன்மை

ஐக்யூ 8 ப்ரோ கிடைக்கும் தன்மை

ஐக்யூ 8 ப்ரோ கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,300 ஆக இருக்கிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.63,100 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.68,800 ஆக இருக்கிறது. இது இரட்டை வண்ண மாறுபாடான லெஜண்ட்ரி எடிஷன் மற்றும் ட்ராக் வெர்ஷன் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஐக்யூ 8 சிறப்பம்சங்கள்

ஐக்யூ 8 சிறப்பம்சங்கள்

ஐக்யூ 8 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1080 x 2376 பிக்சல்கள் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. 10-பிட் வண்ணம் மற்றும் 92.76 விகித திரை உடல் அளவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி எல்பிடிடிஆர் ஆதரவோடு வருகிறது.

மூன்று பின்புற கேமரா

மூன்று பின்புற கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் மூன்று பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கில் சென்சார், 13 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராக்கள் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது.

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

ஐக்யூ 8 ஸ்மார்ட்போன் ஆனது 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இது 4350 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களாக 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

ஐக்யூ 8 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஐக்யூ 8 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஐக்யூ 8 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.78 இன்ச் 2கே 1440 × 3200 பிக்சல்கள் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா குறித்து பார்க்கையில், இது 50 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஜிம்பல் ஸ்டெபிலைசேஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 16 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா வசதியோடு வருகிறது. முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

50 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

50 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

ஐக்யூ 8 ப்ரோ அல்ட்ராசோனிக் 3டி அகலமான பகுதி காட்சி கைரேகை சென்சார் இருக்கிறது. இது 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சம் மற்றும் 50 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Iqoo 8, Iqoo 8 Pro Launched With 120W fast Charging, 2k Display and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X