சரியான வாய்ப்பு- மான்ஸ்டர் ஆரஞ்ச் மாறுபாடு வெளியீடு: ஐக்யூ 7 ஆரம்ப விற்பனையே சலுகையில்தான்!

|

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ம் பிளாக் மற்றும் சாலிட் ஐஸ் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் இந்தியாவுக்கு வந்தது. தற்போது சாதனத்தின் மான்ஸ்டர் ஆரஞ்ச் மாறு இந்தியாவுக்கு வர உள்ளது. இந்த புதிய வண்ண மாறுபாடு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி என்ற ஒரே வேரியண்ட்டில் வருகிறது. அதேபோல் இந்த சாதன அம்சங்களில் எந்த மாறுபாடும் இல்லை எனவும் இது அமேசான் பிரைம் தின விற்பனையின் போது விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

 மான்ஸ்டர் ஆரஞ்ச் மாறுபாடு வெளியீடு: ஐக்யூ 7 ஆரம்ப விற்பனையே சலுகையில்

ஐக்யூ மான்ஸ்டர் ஆரஞ்ச் மாறுபாடு மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒற்றை சேமிப்பு உள்ளமைப்பு விருப்பத்தில் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் வருகிறது. இதன் விலை ரூ.31990 ஆக இருக்கிறது. இந்த சாதனமானது ஜூலை 26 ஆம் தேதி அமேசான் பிரைம் தின விற்பனை மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும். அதுமட்டுமின்றி பிரைம் தின விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.29,990 என்ற சலுகை விலையில் வாங்கலாம். அதுமட்டுமின்றி எச்டிஎஃப்சி வங்கி கடன் மூலம் மேற்கொள்ளப்படும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு10% தள்ளுபடி கிடைக்கும்.

புதிய வண்ண மாறுபாட்டை தவிர மற்ற அம்சங்கள் அப்படியே இந்த ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது. ஐக்யூ 7 ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் 6.62 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒரிஜினல் ஓஎஸ் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் வேகாமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 48 எம்பி பிரதான கேரமா, 13 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்புகள் உள்ளது. இதில் ஓஐஎஸ், எச்டிஆர், பனோரமா மற்றும் போர்ட்ரெய்ட் மோட் ஆகிய கேமரா அமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்புக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கிறது. அதேபோல் இதில் 5ஜி இணைப்பு ஆதரவு மற்றும் யூஎஸ்பி டைப் சி கேமரா அமைப்பு ஆகியவை உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் பிரைம் தின விற்பனையில் போது இந்த சாதனம் வெறும் ரூ.29,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் முதன்மை தர ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. இதில் இருக்கும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தி்ந மூலம் ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
IQoo 7 Smartphones Monster Orange Variant Going to Sale on Amazon Prime day 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X