அட்டகாச அம்சங்களுடன் மிக விரைவில் களமிறங்கும் IQOO 7!
ஐக்யூ இந்தியாவில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. IQOO7 விரைவில் இந்திய சந்தையை எட்டும் என ஐக்யூ இந்திய இயக்குனர் ககன் அரோரா டீசர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சாதனம் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சந்தைக்கு வரும் என உறுதிப்பட தகவல்கள் தெரிவிக்கிறது. ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் அம்சம் சீன வெளியீடு மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஐக்யூ7 ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு கட்டமைப்புகளில் வருகிறது.
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் இதன் இந்திய மதிப்பு ரூ.43,100 ஆக இருக்கும் என தெரிகிறது. அதேபோல் 256 ஜிபி சேமிப்பு வசதி விலை இந்திய மதிப்புப்படி ரூ.47,600 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் அது லேட்டண்ட் ப்ளூ, பிளாக் மற்றும் லெஜண்டரி பதிப்பு ஆகியவையாகும்.

இந்த ஸ்மார்ட்போன் இந்திய விலை ரூ.43,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ஐக்யூ 7 அம்சங்கள் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்படுகிறது. இதன் இந்திய மாறுபாடு ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 12ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது.
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிரான் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புடன் வரும் என கூறப்படுகிறது.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்புகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி முதன்மை கேமராவுடன் வரும் எனவும் இரட்டை 13 எம்பி கேமரா ஆகியவைகளை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
ஐக்யூ 7 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதீத வேக வாட்ஸ் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கிறது. இது 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்சி போர்ட், டூயல் சிம் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் சாதனத்திற்கு நிகர போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications