அடுத்த மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் 'iQOO 7' சீரிஸ் தான்.. விலை இதுவாக இருக்கலாம்..

|

iQOO 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்தின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை நிறுவனம் தற்பொழுது உறுதி செய்துள்ளது. iQOO நிறுவனம் இப்போது இந்த செய்தியைத் தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக ஒரு புதிய டீஸர் வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் இந்திய ரசிகர்களுக்கு அதன் அடுத்த மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

 iQOO 7 சீரிஸ் ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகமா?

iQOO 7 சீரிஸ் ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகமா?

iQOO நிறுவனம் பகிர்ந்த டீஸரின் படி, iQOO 7 சீரிஸ் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும் iQOO ட்வீட்டில் தொடரின் சரியான வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவிக்கவில்லை. டிவிட்டர் இடுகை "நீங்கள் மான்ஸ்டரை கேட்டீர்கள், அது வருகிறது. சிறந்த தொழில்நுட்பத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். #ComingSoon #MonsterIsComing # iQOO7Series". என்று பதிவிட்டுள்ளது. IQOO 7 வரிசையில் iQOO 7 லெஜண்ட் மாடலும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 iQOO 7 லெஜண்டரி எடிஷன் மாடல்

iQOO 7 லெஜண்டரி எடிஷன் மாடல்

இது ஜனவரியில் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிஎம்டபிள்யூ எம் மோட்டார் பதிப்பில் இருக்கும் ஸ்பெஷல் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 7 லெஜண்டரி எடிஷன் மாடல் ரெட், பிளாக் மற்றும் ப்ளூ நிற கோடுகளுடன் வெள்ளை பின்புற பேனலுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் லாடென்ட் ப்ளூ வண்ண விருப்பங்களிலும் வருகிறது.iQOO Neo 5 இந்த மாதத்தில் iQOO 7 லெஜண்ட் ஸ்மார்ட்போனுடன் அதிகாரப்பூர்வமாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளிசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி

iQOO 7 ஸ்மார்ட்போனின் விலை

iQOO 7 ஸ்மார்ட்போனின் விலை

இந்தியாவில் iQOO 7 ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே டீஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மாடலின் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் தோராயமாக ரூ .30,990 முதல் ரூ .39,990 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், டிரிபிள் ரியர் கேமரா அம்சம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் உயர் புதுப்பிப்பு டிஸ்பிளே ஆகியவற்றுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. iQOO 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

iQOO 7 விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் பஞ்ச்-ஹோல் FHD பிளஸ் கொண்ட 1080x2400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், 1000 ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங் விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் 8 ஜிபி / 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஏலியன்களை விட ஒருபடி மேலேபோய் யோசித்த மனிதர்கள்.. தோன்றியது சாஸர் வடிவ ஏர்ஷிப்.. இது எதற்கு தெரியுமா?ஏலியன்களை விட ஒருபடி மேலேபோய் யோசித்த மனிதர்கள்.. தோன்றியது சாஸர் வடிவ ஏர்ஷிப்.. இது எதற்கு தெரியுமா?

மூன்று கேமரா அமைப்பு

மூன்று கேமரா அமைப்பு

இது பின்புறத்தில் ஒரு மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP (f / 1.8) பிரதான சென்சார், 13MP (f / 2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 13MP (f / 2.5) போட்ரைட் கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், செல்பி மற்றும் வீடியோ காலிங் அனுபவத்திற்காக 16MP கேமராவை நிறுவனம் வழங்கியுள்ளது. iQOO 7 ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி மூலம் 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட விவோவின் சமீபத்திய ஒரிஜினோஸ் 1.0 உடன் வருகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
iQOO 7 series confirmed the launch in India April month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X