Home
Mobile

iQOO 7 விலை இவ்வளவு தானா? அமேசானில் எப்போது விற்பனை?

இந்தியாவில் iQOO 7 ஸ்மார்ட்போனின் விலை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக அமேசானில் கசிந்துள்ளது. சில காலத்திற்கு முன்பு, iQOO 7 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மீது உறுதியான தகவல் கிடைக்காமல் நாம் தடுமாறினோம். காரணம், இது சீனாவில் வெளியிடப்பட்ட iQOO 7 பதிப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், iQOO நிறுவனம் நிச்சயமாக இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வெறும் ரூ .40,000 விலைக்கும் குறைவாக அறிமுகம் செய்யுமென்று கூறியிருந்தது.

iQOO 7 விலை

iQOO 7 விலை

இப்போது, அமேசான் இந்தியா கவனக்குறைவாக இந்தியாவில் iQOO 7 விலையை சில விளம்பரப் படங்கள் மூலம் கசியவிட்டுள்ளது. இது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் அவர்களால் பகிரப்பட்டுள்ளது. அமேசான் படம் முறையானது என்றதனால் இந்த செய்தியை நாம் முழுமையாக நம்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் படி iQOO 7 இந்தியாவில் ரூ .34,990 விலையில் கிடைக்கும் ஏப்ரல் 26ம் தேதி அறிமுகமாகிறது என்பது உறுதியாகியுள்ளது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 11X இன் லீக்கில் இடம் பெறுகிறது .

iQOO 7 லெஜண்டரி எடிஷன்

iQOO 7 லெஜண்டரி எடிஷன்

இது ஜனவரியில் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிஎம்டபிள்யூ எம் மோட்டார் பதிப்பில் இருக்கும் ஸ்பெஷல் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 7 லெஜண்டரி எடிஷன் மாடல் ரெட், பிளாக் மற்றும் ப்ளூ நிற கோடுகளுடன் வெள்ளை பின்புற பேனலுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் லாடென்ட் ப்ளூ வண்ண விருப்பங்களிலும் வருகிறது. iQOO Neo 5 இந்த மாதத்தில் iQOO 7 லெஜண்ட் ஸ்மார்ட்போனுடன் அதிகாரப்பூர்வமாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO 7 சிறப்பம்சம்

iQOO 7 சிறப்பம்சம்

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் பஞ்ச்-ஹோல் FHD பிளஸ் கொண்ட 1080x2400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், 1000 ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங் விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் 8 ஜிபி / 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

4000mAh பேட்டரி

4000mAh பேட்டரி

அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் இது பின்புறத்தில் ஒரு மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP (f / 1.8) பிரதான சென்சார், 13MP (f / 2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 13MP (f / 2.5) போட்ரைட் கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், செல்பி மற்றும் வீடியோ காலிங் அனுபவத்திற்காக 16MP கேமராவை நிறுவனம் வழங்கியுள்ளது. iQOO 7 ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி மூலம் 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய ஒரிஜினோஸ் 1.0 உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
iQOO 7 price in India leaked on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X