Home
Mobile

விரைவில் வெளியாகும் ஐக்யூ 7: விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்!

ஐக்யூ7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

விரைவில் வெளியாகும் ஐக்யூ 7

விரைவில் வெளியாகும் ஐக்யூ 7

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்யூ7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. விவோ துணை பிராண்டில் இருந்து புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டாலும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கவில்லை.

விலை விவரங்கள் வெளியாகியுள்ளது

விலை விவரங்கள் வெளியாகியுள்ளது

சில தினங்களுக்கு முன்னதாக வெளியான டுவிட்டில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகியுல்ளது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஐக்யூ 7 ஸ்மார்ட்போனின் விலை வெளியாகியுள்ளது.

ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்

ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்

ஐக்யூ 7 இந்திய விலை விவரங்கள் குறித்த டுவிட்டின்படி, ஐக்யூ7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 மாடலைவிட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 மாடலின் விலை ரூ.49,999 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம்

8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனானது ஜனவரி மாதம் சீனாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு டிஸ்ப்ளே மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபு உள்சேமிப்பு வேரியண்ட் எனவும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.42,200 ஆக இருக்கும் எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.46,700 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனானது சீனாவில் பிளாக் லேட்டண்ட் ப்ளூ, லெஜண்டரி எடிஷன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்தியாவுக்கு வரும் ஸ்மார்ட்போன் வேரியண்ட்கள் மற்றும் வண்ண விருப்பங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ஐக்யூ7 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. ஐக்யூ7 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒரிஜினோஸ் ஓஎஸ் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐக்யூ 7 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 13 எம்பி ஆழ சென்சார் ஆகிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

16 எம்பி செல்பி கேமரா

16 எம்பி செல்பி கேமரா

ஐக்யூ 7 ஸ்மார்ட்போனின் முன்புற அம்சங்களை பொருத்தவரையில், இதில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொருத்தவரையில் இது 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2. இரட்டை சிம் ஆதரவு, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும். மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஐக்யூ 7 ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 9 சாதனத்தைவிட குறைந்தவிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ப்ரீமியம் அம்சங்களோடு முதன்மைரக ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சாதனம் சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
IQoo 7 May Launching Soon in India: Expected Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X