Home
Mobile

கொஞ்சம் காத்திருங்கள்: விரைவில் களமிறங்கும் அட்டகாச ஐக்யூ ஸ்மார்ட்போன்கள்- உயர்ரக அம்சங்கள்!

ஐக்யூ நிறுவனம் இம்மாத இறுதியில் ஒரு ஸ்மார்ட்போனையும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அடுத்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் களமிறங்கும் ஐக்யூ ஸ்மார்ட்போன்

விரைவில் களமிறங்கும் ஐக்யூ ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7 இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக்யூ 7 இந்தியாவில், இந்திய தர நிர்ணய சான்றிதழை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஐஎஸ் சான்றிதழ்

பிஐஎஸ் சான்றிதழ்

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் உடன் ஐக்யூ நியோ 5 சாதனமும் பிஐஎஸ் சான்றிதழை பெற்றிருக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் மாடல் எண் I2009 I2011 ஆகியவைகளுடன் சான்றளிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஐ2009 ஐக்யூ 7 சாதனத்தை குறிக்கும் எனவும் ஐ2011 ஐக்யூ நியோ 5 சாதனத்தை குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது.

விரைவில் களமிறங்கும் ஐக்யூ 7

விரைவில் களமிறங்கும் ஐக்யூ 7

பிஐஎஸ் சான்றதழ் பெற்றதன் மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களும் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீடு குறித்து முன்னதாக வெளியான தகவலின்படி மார்ச் மாத இறுதியில் ஒரு ஸ்மார்ட்போனும், ஏப்ரல் மாத இறுதிக்குள் இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. சமீபத்தில் ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 7 சாதனம் குறித்து ஒரு மறைமுக டுவிட் செய்தது. இந்தியாவில் உடனடியாக ஐக்யூ 7 வெளியீடு குறித்த தகவலை நிறுவனம் தெரிவித்தது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இதுகுறித்த வெளியான தகவலின்படி ஐக்யூ 7 முதன்மை ரக மாடலாக இந்தாண்டு ஜனவரி மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் பஞ்ச் ஹோல் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கைரேகை ரீடர் உடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

12 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு

12 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி முதன்மை கேமராவுடன் வரும் எனவும் 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 13 எம்பி மூன்றாம் நிலை கேமராவுடன் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் கூறப்படுகிறது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரி 120வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சீனாவில் ஐக்யூ நியோ 5 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் இயக்கப்படுகிறது.

48 எம்பி முதன்மை கேமரா

48 எம்பி முதன்மை கேமரா

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவோடு அறிமுகம் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
IQoo 7, IQoo Neo 5 Launching Soon in India: Expected Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X