அடடே., இது BMW பதிப்புங்க: இந்தியாவுக்கு வரும் ஐக்யூ7 லெஜண்ட்- இதோ விலை, அம்சங்கள்!

|

ஐக்யூ7 லெஜண்ட் பிஎம்டபிள்யூ எம்எம் விளையாட்டு பதிப்பு ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு விரைவில் வருகிறது. விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். அடுத்த சில வாரங்களில் ஐக்யூ7 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும் என நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் வரும் எனவும் இரண்டும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ7 மற்றும் ஐக்யூ 7 லெஜண்ட்

ஐக்யூ7 மற்றும் ஐக்யூ 7 லெஜண்ட்

ஐக்யூ5 நியோ மாடலை அடிப்படையாகக் கொண்ட வெண்ணிலா ஐக்யூ7 மற்றும் ஐக்யூ 7 லெஜண்ட் சீனாவில் இருந்து நேரடியாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைய விளம்பரங்களின்படி இந்த ஐக்யூ7 லெஜண்ட் இந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ எம் மோட்டோர் ஸ்போர்ட் பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது என்ற தகவல் உறுதிப்பட தெரிவிக்கப்படுகிறது. ஐக்யூ7 லெஜண்ட் பிஎம்டபிள்யூ எம் ஸ்போர்ட்ஸ் பதிப்பானது ஜனவரி 2021-ல் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எம் மோட்டார் ஸ்போட்ஸ் பதிப்பு

பிஎம்டபிள்யூ எம் மோட்டார் ஸ்போட்ஸ் பதிப்பு

இந்த ஸ்மார்ட்போன் பதிப்பானது நிலையான ஐக்யூ7 லெஜண்ட்டின் சிறந்த பதிப்பாக இது இருக்கும். இந்த இரண்டு மாடல்களை ஒப்பிடும்போது, பிஎம்டபிள்யூ எம் மோட்டார் ஸ்போட்ஸ் பதிப்பு பின்புறத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. மேலும் இந்த கோடுகளில் Fascination Meets Innovation என்ற குறிச்சொல்லுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பதிப்பு ஐக்யூ7 லெஜண்ட் பிஎம்டபிள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் பதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

லம்போர்கினி பதிப்பு, மெக்லாரன் பதிப்பு

லம்போர்கினி பதிப்பு, மெக்லாரன் பதிப்பு

ஐக்யூ 7 லெஜண்ட் இந்தியாவில் பிஎம்டபிள்யூ எம் ஸ்போர்ட் பதிப்பை அறிமுகம் செய்கிறது. இதை சிறந்த பதிப்பு ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்வதற்கு ஐக்யூ மற்றொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் கார் பிராண்டுகளுடன் இணைந்து இந்த சிறப்பு பதிப்பு ஸ்மார்ட்போன்களை கொண்டு வருகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோவின் லம்போர்கினி பதிப்பு ஒப்போ அறிமுகம் செய்தது. அதேபோல் ஒன்பிளஸ் 6டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ சாதனத்தை மெக்லாரன் பதிப்புடன் அறிமுகப்படுத்தியது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ஐக்யூ 7 லெஜண்ட் பிஎம்டபிள்யூ எம் மோட்டோர் ஸ்போர்ட் நிலையான மாடலை விட வேறுபட்டதாக இருக்காது. ஐக்யூ 7 மற்றும் ஐக்யூ 7 லெஜண்ட் 1080 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன.இந்த இந்தியா அறிமுகத்தில் காட்சி அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டிஸ்ப்ளே சிப் பொருத்தப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

ஐக்யூ 7 ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சீன வேரியண்ட் 120 வாட்ஸ் சார்ஜிங் அம்சத்துக்கு பதிலாக இந்தியாவில் 66 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஐக்யூ 7 கேமராக்கள் விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனின் போன்ற அமைப்பாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, மேலும் இதில் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது.

Best Mobiles in India

English summary
IQOO 7 BMW M Motorspot Edition Launching Confirms in India: Expected Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X