Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 2K டிஸ்பிளே.. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6.. புது iQOO போன்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படியான சிப்செட்டுடன் ஐக்யூ 16டி (iQOO 16T) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், டிஸ்பிளேவிலும் பிரீமியம் காட்டும்படி பேனல் கிடைக்க இருக்கிறது. இந்த ஐக்யூ 16டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மே மாதத்தில் ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆனால், அடுத்த மே மாதம் ஐக்யூ 16டி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இப்போது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக முக்கிய பீச்சர்கள் கசிந்து, விரைவில் வெளியாகும் என்பதை உறுதி செய்து விட்டது. இதனால், முன்கூட்டியே வெளியாகவும் வாய்ப்புள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 2K டிஸ்பிளே.. புது iQOO போன்!

ஐக்யூ 16டி அம்சங்கள் (iQOO 16T Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் 6 (Snapdragon 8 Elite Gen 6) கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 16டி வெளியாக இருக்கிறது. அதேபோல மீடியாடெக் டைமன்சிட்டி 9600 (MediaTek Dimensity 9600) சிப்செட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ நிறுவனம் இதை ஓரிரு வாரங்களில் உறுதி செய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கொடுக்கும்படி 2K சாம்சங் டிஸ்பிளேவை இந்த ஐக்யூ 16டி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. பெரிய பேட்டரி கொண்ட மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், இதில் பில்ட்-இன் கூலிங் ஃபேன் (Built-in Cooling Fan) கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துள்ளது. இருப்பினும், மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டும். அதேபோல விலை விவரங்களையும் இதை வைத்து யூகிக்கலாம். இந்திய மார்கெட்டில் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனானது, ஐக்யூ 15ஆர் மாடலாக வருகிறது.

ஐக்யூ 15டி அம்சங்கள் (iQOO 15T Specifications): 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 2K+ ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 மான்ஸ்டர் எடிஷன் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9500 Monster Edition 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

8000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களுடன் ஐக்யூ 16டி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, ஐக்யூ 16டி ஸ்மார்ட்போனை ரூ.63,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
iQOO 16T Tipped To Launch With Snapdragon 8 Elite Gen 6 Chipset Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X