Home
Mobile

iQOO ஆட்டம்.. OnePlus ஓட்டம்.. பெரிய டிஸ்பிளே, 9000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன ஐக்யூ (iQOO) நிறுவனமானது.. தம்பி உன் ஃபார்முலா எனக்கு வேலைக்கு ஆகாது என்பதை மீண்டும் நிரூபிக்கும் படியாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீண்டும் ஓடவிடும் படியான ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

ஐக்யூ நிறுவனம் அடுத்த மாதம், டிமென்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்செட் கொண்ட ஐக்யூ நியோ 11எஸ் (iQOO Neo 11S) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில், ஐக்யூ 16 (iQOO 16) மற்றும் ஐக்யூ நியோ 12 (iQOO Neo 12) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தக்கூடும். இந்நிலையில், ஐக்யூ 16டி (iQOO 16T) மாடலும் உருவாக்கத்தில் இருப்பதாக ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.

iQOO ஆட்டம்.. OnePlus ஓட்டம்.. பெரிய டிஸ்பிளே, 9000mAh பேட்டரி!

டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிக்காச்சு (Tipster Smart Pikachu) வழியாக கிடைத்துள்ள விவரங்களின் படி, ஐக்யூ தனது டி-சீரிஸ் ஸ்மார்ட்போனை புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களுடன் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும். இந்த சீரீஸின் கீழ் வரும் அடுத்த மாடல் தொடர்ந்து பெரிய டிஸ்பிளேவையே கொண்டிருக்கும்

அதாவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 13டி, ஒன்பிளஸ் 13எஸ் மற்றும் ஒன்பிளஸ் 15டி போன்ற மினி ஸ்மார்ட்போன் அல்லது காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யாமல் - ஐக்யூ நிறுவனம் ஆனது பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போகளிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தும்.

நினைவூஓடும்வண்ணம் முன்னதாக அறிமுகமான ஐக்யூ 15டி (iQOO 15T) மாடலானது ஒன்பிளஸ் 15டி மாடலுக்கு போட்டியாக ஒரு சிறிய அளவிலான (compact) பிளாக்ஷிப் போனாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அது 6.82-இன்ச் அளவிலான பெரிய அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் அறிமுகமானது. ஆக தற்போதைய லீக் தகவலின்படி, ஐக்யூ 16டி மாடலும், முந்தைய மாடலை போலவே பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

ஐக்யூ 16டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 2கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85-இன்ச் சாம்சங் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 9600 போன்ற பிளாக்ஷிப் சிப்செட் அல்லது ஹைஎண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் வகையை சார்ந்த சிப்செட்
- 200MP வரையிலான ப்ரைமரி சென்சார் கொண்ட டூயல் அல்லது ட்ரிபிள் ரியர் கேமரா
- 7000mAh முதல் 9000mAh க்குளான பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங்

முன்னதாக அறிமுகமான ஐக்யூ 15ஆர் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+ சான்றிதழ் மற்றும் 4,320Hz PWM டிம்மிங் ரேஷியோ ஆதரவையும் கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிரேம் இண்டர்போலேஷன் வழியாக கேமிங்கின் போது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை LPDDR5x ரேம், 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் அட்ரெனோ 826 ஜிபியு (Adreno 826 GPU) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-700V ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது, இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது

Best Mobiles in India

English summary
iQOO 16T Display Specifications Leaked Check Out Camera Battery Features Too
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X