யாரு சாமி அவன்.. 8400mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பீச்சர்களுடன் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 8400mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் டெலிபோட்டோ கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்கிறது. 3டி வேப்பர் சேம்பர், மான்ஸ்டர் ஹைப்பர் கோர் என்ஜின் கிடைக்கிறது. கியூ3 கேமிங் சிப்செட்டில் அடுத்த வெர்ஷனாக கியூ4 கேமிங் சிப் இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. 165 fps கேமிங் மற்றும் 2K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐக்யூ 16 அம்சங்கள் (iQOO 16 Specifications): 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. மேலும், 2800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 10000 நிட்ஸ் பீத் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 2என்எம் (Octa Core Snapdragon 8 Elite Extreme Gen 6 2nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரிநோ 850 ஜிபியு (Adreno 850 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கியூ4 கேமிங் சிப் (Q4 Gaming Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 7 (OriginOS 7) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கிறது.
சோனி சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 8400mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மட்டுமல்லாமல், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.85,000 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.97,000 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,07,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.1,21,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது.
இது சீனவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட விலையாகும். ஆகவே, மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் பட்ஜெட் மாறுபடும். அதேபோல பீச்சர்களில் ஏதேனும் மாற்றம் இருக்கிறாத என்பது விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
