iQOO வெச்சான் பாருங்க.. 8500mAh பேட்டரி.. OV கேமரா.. IP69 ரேட்டிங்.. 3D ஃபிங்கர்பிரிண்ட்.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படியான பீச்சர்களுடன் ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. சிப்செட், கேமரா, பேட்டரி மற்றும் டியூரபிலிட்டி பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு நவம்பர் மாதத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாகி கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கியது. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப பீச்சர்கள் கசிந்து வருகின்றன.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக சிப்செட், பேட்டரி, கேமரா சென்சார், வாட்டர் ரெசிஸ்டன்ஸ், டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்கள் கசிந்துள்ளன. சீன மார்கெட்டுக்கு பிறகு இந்தியாவிலும் வெளியாகும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. முதலில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ 16 அம்சங்கள் (iQOO 16 Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட்டுடன் இந்த ஐக்யூ 16 வெளியாக இருக்கிறது. சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical Dual Speakers) கிடைக்க இருக்கின்றன. கேமிங் பிரியர்கள் விரும்படி 0916 சீரிஸ் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டர் (X-axis Linear Motor) கிடைக்க இருக்கிறது.
3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic Fingerprint Sensor) கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கான ஹேப்டிக் மற்றும் ஆடியோ செட்டப் கிடைக்கும். இதுபோக அதிக பேக்கப் கொடுக்கும்படி 8500mAh பேட்டரியை இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஓம்னி விஷன் ஓவி50கியூ (OV50Q) சென்சாருடன் கேமரா கிடைக்க இறுக்கிறது. ஏஆர் ஃபிலிம் லேயர் டிஸ்பிளே வருகிறது. 2K ரெசொலூஷன், பிளாட் டிசைனில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. விலையும் இதை வைத்தே யூகிக்க முடியும்.
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரிநோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) கிடைக்கிறது. ஆகவே, ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் பிரத்யேக கேமிங் சிப் கிடைக்கும். அட்ரினோ ஜிபியு எதிர்பார்க்கலாம்.
6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz டிம்மிங் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்களை ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். கொஞ்சம் அப்கிரேட்களும் இருக்கும். 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
இதில் சோனி சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் ஓம்னிவிஷன் சென்சார் கிடைக்க இருக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் 8500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ரூ.52,000 பட்ஜெட்டில் ஐக்யூ 15 கிடைத்தது. ஆகவே, ரூ.60,000 பட்ஜெட்டில் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications