iQOO போட்டான் பாரு.. 8400mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் மாடலாக ஐக்யூ 16 (iQOO 16) களமிறங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பீச்சர்கள் வெளியீட்டுக்கு முன்பே கசிந்துவிட்டன. ஏற்கனவே, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்திருந்தன. இப்போது, பேட்டரி விவரங்களும் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல சீன மார்கெட்டில் முதலில் வெளியாகும். பிறகு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாகும். இந்த வெளியீட்டை உறுதி செய்யும்படி பீச்சர்கள் கசிந்துவருகின்றன.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக பேட்டரி பீச்சர்கள் கசிந்துள்ளன. முன்னதாக 8500mAh பேட்டரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 8400mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகும் என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரியவந்துள்ளது. ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது.
ஐக்யூ 16 அம்சங்கள் (iQOO 16 Specifications): 8400mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது. 6.85 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இது சாம்சங் எம்16 டிஸ்பிளே மாடலாக இருப்பதால், பிரீமியம் குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். 2K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது.
165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஓர்ஜின்ஓஸ் 7 (OriginOS 7) மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 16 வெளியாக இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. கியூ4 கேமிங் சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. பிறகு நவம்பர் மாதத்தில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்திய மார்கெட்டில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.70,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை ரூ.79,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். சீனாவில் வெளியான பிறகு தெரியவரும்.
முன்னதாக வெளியான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கையில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
6.85 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின்ஓஸ் 6.0 கிடைத்தது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைத்தது. 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
