மிரண்டு போன மார்க்கெட்.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் விரைவில் ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போனை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் தற்போது IMEI database தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ 16 அம்சங்கள் (iQOO 16 Specifications): ஐக்யூ 16 போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro chipset) உடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.85-இன்ச் சாம்சங் ஒஎல்இடி (Samsung OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது ஐக்யூ 16 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Periscope கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன. அதேபோல் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ 16 போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications