நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் டா.. iQOO-வை செஞ்சி விட்ட OnePlus-ன் அடுத்த போன்.. எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் அடுத்த ஸ்மாட்போனில் இடம்பெறவுள்ள ஒரு முக்கிய அம்சத்தை பற்றி கேள்விப்பட்டதுமே.. ஐக்யூ ரசிகர்கள், ஒன்பிளஸை பார்த்து - "அவ்ளோதான் உன்னைய முடிச்சு விட்டாங்க போங்க!" என்று கூறலாம். ஆனால் உண்மை முற்றிலும் வேறு மாதிரி இருக்கப்போகிறது. அப்படி என்ன அம்சம்? எந்த மாடலில்? இதோ விவரங்கள்:
ஐக்யூ 12 Vs ஒன்பிளஸ் 12, ஐக்யூ 13 Vs ஒன்பிளஸ் 13, ஐக்யூ 15 Vs ஒன்பிளஸ் 15 ஆகிய போட்டிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவிற்கு இருக்கப்போகிறது - ஐக்யூ 16Vs ஒன்பிளஸ் 16 ஆகிய மாடல்களுக்கு இடையேயான போட்டி!

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்ட முதல் போன்களில் ஒன்றாக, ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கடந்த நவம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 2கே ஓஎல்இடி டிஸ்பிளே, ஒரு பெரிய 7000எம்ஏஎச் பேட்டரி, 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் பல ஏஐ அம்சங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆக, முக்கியமாக ஒன்பிளஸ் 15 மாடலுக்கான "நேருக்கு நேர்" போட்டியாக அறிமுகமானது.
ஐக்யூ 15 மாடலானது இன்னமும் கூட சந்தைக்கு வந்த லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாகவே தான் உள்ளது. அதற்குள் அதன் அடுத்த ஜெனெரஷன் மாடலான ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போனை பற்றிய ஒரு சுவாரசியமான லீக் வெளியாகியுள்ளது. ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை பற்றிய ஆரம்பகட்ட விவரங்களை, டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு பகிர்ந்துள்ளார்
குறிப்பிட்ட டிப்ஸ்டரின் படி, சாம்சங்கின் 165ஹெர்ட்ஸ் மற்றும் 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்களுடன் கூடிய 2கே டிஸ்பிளேவை சோதிக்கும் சில பிராண்டுகளில் ஐக்யூ நிறுவனமும் உள்ளது. இதுகுறித்த அவருடைய பதிவில் உள்ள ஒரு ஹேஷ்டேக்கில் ஐக்யூ 16 மாடலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஐக்யூ 16 மாடலில் சாம்சங்கின் 185Hz பேனல் இடம்பெறலாம் என்கிற யூகங்கள் கிளம்பியுள்ளன
ஒன்பிளஸ் VS ஐக்யூ: கடந்த முறை, அதாவது ஒன்பிளஸ் 15 உடனான போட்டியில் ஐக்யூ 15 மாடலின் டிஸ்பிளே சற்றே பின்தங்கிவிட்டது. ஒன்பிளஸ் 15 ஆனது 165ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களுக்கு 165FPS கேமிங்கை ஆதரிக்கிறது. ஆனால் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 144ஹெர்ட்ஸ் ஆதரவு தான் உள்ளது
ஆக ஐக்யூ 16 மாடலில் 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இடம்பெற்றால் அது ஒரு பெரிய மேம்பாடாக இருக்கும். இதன் விளைவாக, ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் 185FPS கேமிங் ஆதரவு கிடைக்கும். இது ஸ்மூத் ஆன விஷூவல்களையும், குறைவான லேடன்சியையும் அளித்து, ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும்.
OPINION: ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 185ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உங்களை ஈர்க்கக்கூடிய ஒரு அம்சமாக தோன்றினால், நீங்கள் இன்னும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஆரம்பகால வதந்திகளின்படி, ஒன்பிளஸ் 16 ஆனது 200ஹெர்ட்ஸ்-க்கும் அதிகமான ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
200ஹெர்ட்ஸ் என்பது நாம் கேமிங் மானிட்டர்கள் மற்றும் லேப்டாப்களில் பார்க்கும் "அளவு" ஆகும். இதுவரை ஒரு ஸ்மார்ட்போனில் பார்க்காத "அளவு" ஆகும். 200ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் அதிகமான ரெஃப்ரெஷ் ரேட்டுடன், ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக கேமிங் போன்களின் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும். ஆக மொத்தம் ஒன்பிளஸ் 16 உடன் சரியாக போட்டிப்போட ஐக்யூ 16 க்கு இன்னும் நிறைய தேவைப்படலாம்.


Click it and Unblock the Notifications








