Home
Mobile

9000mAh பேட்டரி OnePlus 16 க்கு இப்போதே ஆப்பு ரெடி.. iQOO 16 அம்சங்கள் அப்படி.. முரட்டு போட்டியா இருக்கே!

ஐக்யூ (iQOO) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல. இந்நிருவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனும் கூட ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கு மண்டை குடைச்சலை கொடுக்கப்போவது - இப்போதே "கிட்டத்தட்ட" உறுதி ஆகிவிட்டது, அது ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போன் ஆகும்.

சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி, ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் ஆனது ஐஎம்இஐ தரவுத்தளத்தில் (IMEI Database) தோன்றி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்வருகிற 2026 அக்டோபர் மாதம் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் முக்கிய அம்சங்கள் இப்போதே லீக் ஆக தொடங்கிவிட்டன.

9000mAh பேட்டரி OnePlus 16 க்கு இப்போதே ஆப்பு ரெடி.. iQOO 16 அம்சங்கள்

நம்பகமான தகவல் வழங்குநர் (டிப்ஸ்டர்) ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் (Digital Chat Station) ஒரு புதிய வெய்போ (Weibo) பதிவின்படி, ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் சிப்செட்டை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒன்பிளஸ் 15 க்கு போட்டியாக ஐக்யூ 15 மாடலை அறிமுகம் செய்துள்ள ஐக்யூ நிறுவனம் ஆனது, ஒன்பிளஸின் இன்னொரு லேட்டஸ்ட் மாடல் ஆன ஒன்பிளஸ் 15டி மாடலுக்கு போட்டியாக ஐக்யூ 15டி மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக.. தகவல் வெளியான சில நாட்களிலேயே.. இந்த தகவலும் வந்துள்ளது. ஆக ஐக்யூ நிறுவனம் - ஒன்பிளஸ் 16 க்கான போட்டியை இப்போதே தயார் செய்ய தொடங்கிவிட்டது போல் தெரிகிறது.

குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை 2என்எம் சிப்கள் ஆனது 2 பதிப்புகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பெயர்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த சிப்செட்கள் தற்காலிகமாக முறையே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 (SM8950) மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (SM8975) என்று அழைக்கப்படுகின்றன.

ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- பிளாட் ஆன டிசைன்
- மிகவும் அதிகமான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 2K சாம்சங் டிஸ்பிளே
- இதன் ஸ்க்ரீன் 165Hz அல்லது 185Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கக்கூடும்
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா

முன்னதாக இதே டிப்ஸ்டர் ஒன்பிளஸ் 16 குறித்த விவரங்களையும் லீக் செய்துள்ளார். டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறக்கூடும். இது உண்மையாக இருந்தால் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ள 50எம்பி டெலிஃபோட்டோ சென்சாரிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.

மேலும் தற்போதைய மாடலின் மிதமான 1/2.76-இன்ச் சென்சாருடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் கேமரா சேட்ப ஆனது மிகப்பெரிய சென்சாரைப் பயன்படுத்தும் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார் - அது 1/1.எக்ஸ்-இன்ச் வரம்பில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஒன்பிளஸ் 16 ஆனது ஒரு வெறித்தமான கேமரா போன் ஆகவும் இருக்கும்!

இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் 200ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை சோதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில்தான் ஒன்பிளஸ் 15 உடன் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுவந்தது. எனவே நேரடியாக 200ஹெர்ட்ஸ்-க்கு தாவுவது பற்றி யோசிப்பது மற்ற நிறுவனங்களுக்கு பைத்தியக்காரத்தனமானதக தோன்றலாம்.

ஆனால் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் வன்பொருள் ஆனது திறன் கொண்டதாக இருந்தாலும், இது சாத்தியம் தான். ஒன்பிளஸ் நிறுவனம் இதோடு நிறுத்தவில்லை, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 9,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வந்த ஒன்பிளஸ் 15 மாடலில் 7,300mAh பேட்டரி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 16 tipped to Pack Snapdragon 8 Elite Gen 6 Pro to compete 9000mAh Battery OnePlus 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X